Monday, 28 September 2020

 






 

வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் .தோழர் முவர் பாஷா , வயது 64, மே 2014ல் ஒய்வு பெற்ற ரிக்கார்ட் கீப்பர் AOTR  செக்சன் அவர்கள் 26-09-2020 அன்று மாலை இயற்கை எய்தினார் ( கொரோனாவால் அல்ல ) . அன்னாரது உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை கூறுகிறோம். அவரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகிறோம்.

அவரது கைப்பேசி எண் : 94453 77232,
இல்லம்: 044-2813 3579.

Saturday, 26 September 2020

 

அனைத்து ஓய்வூதியர்கள்  கவனத்திற்கு ,
Ddgm / HR ( Admn )  அலுவலகம் 10 மில்லர்ஸ் ரோட்  லிருந்து 78. புரசைவாக்கம் ஹை ரோட் -ல் உள்ள தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்ட உள்ளது. இந்த அலுவலக மாற்றல் காரணமாக சரண்டர் சர்டிபிகேட் பணிகள் தற்காலிகமாக 28-09-2020 லிருந்து 04-10-2020 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது .
05-10-2020 முதல் DGM  ஆபிஸ் இயங்கத் துவங்கும்ஓய்வூதியர்கள் ID கார்டுகள் இன்னமும் தயாராக இல்லாத காரணத்தால் ID கார்டு வழங்கும் பணியும்  15-10-2020 வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

ஓய்வூதியர்களுக்கு ஏற்படும் அசைவுகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம். என்றும் உங்கள் சேவையில்,

DGM / HR (Admn )
மற்றும்
குழுவினர்



SBI வங்கியில் பென்ஷன் கணக்கு வைத்திருக்கும் SAMPANN பென்ஷனர்கள் அவர் அவர்களது கிளைகளியே LIFE CERTIFICATE வசதி செய்து கொடுப்பதற்கு SBI வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.  அதற்கு பென்ஷனர்கள் கீழே கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் செயல்படவேண்டும். 
1. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவைகளை சரிபார்த்து எழுத்து பூர்வமான் LIFE CERTIFICATE ஐ பென்ஷனர்களுக்கு வழங்குவார். அதை பென்ஷனர்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது
2. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் சென்றால்  JEEVAN PRAMAAN மூலமாக DIGITAL LIFE CERTIFICATE கொடுப்பதற்கும் SBI அதிகாரிகள் உதவி செய்வார்கள்
இதற்கான SBI வங்கி உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்.

 


Friday, 25 September 2020

 

                                                        வருந்துகின்றோம்.
 தோழர்களே. சிறந்த பண்பாளர்,  பன்மொழி
பாடகர்,  இசை அமைப்பாளர்,  பாடகர், அகில இந்திய அளவில் மிக அதிகமான பாடல்களை பாடியுள்ளவர்,   பெரும் மதிப்பு கொண்ட  திரு S P பாலசுப்பிரமணி அவர்களின் மரண செய்தி  கேட்டு அதிர்ச்சி அடைகிறோம்.
அவரது மறைவினால் இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கும் திரை இசை கலைஞர்களுக்கும் கோடான கோடி இசை ரசிகர்களுக்கும் நமது மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின்ஆன்மா சாந்தி   அடைய இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்.
மாநில செயலர்


Wednesday, 23 September 2020

 

நன்றி!        நன்றி!       நன்றி!

தோழர்களே.
நமது மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஓய்வூதியர்களின் சிரமத்தை புரிந்து கொண்டு 
MRS CARD  புதுப்பித்துக்கொள்ள காலஅவகாசத்தை 30.11.2020 வரை உத்தரவு வழங்கிய CGM  CHTD  அவர்களுக்கு மாநில சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.தோழர்கள் அனைவரும் பன்படுத்திக்  கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.இந்த உத்தரவு வழங்குவதற்கு உறு துணையாக செயல்பட்ட 
திரு.B. மஞ்சுநாத் DGM HR Retd  அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
S.தங்கராஜ்
மாநில செயலர்,
சென்னை தொலைபேசி மாநிலம்.



 



is CCA Office 
Customer Care Number 
which is reachable now. 
CCA Officials answer 
our queries regarding
 IDA to CDA  mapping etc. 
Our members can well
utilise this facility  .

Tuesday, 22 September 2020

 

தோழர்களே!

MRS CARD   புதுப்பித்துக்கொள்வது சம்பந்தமாக நமது CGM அவர்களுடன் பேசி உள்ளேன். கொராணா தொற்றின் காரணமாக இதுவரையில் சரியாக போக்குவத்து வசதிகள் இல்லை. குறிப்பாக செங்கல்பட்டு. காஞ்சிபுரம், திருத்தனி, திருவள்ளூர் போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்த தோழர்களுக்கு எந்தவிதமான போக்குவத்து வசதியும் இல்லை என்பதை தெரிவித்துள்ளோம். ஆகவே MRS  CARD  புதுப்பித்துக் கொள்வதற்கு காலஅவகாசம் நீட்டிக்கப் பட வேண்டும்  என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

நமது CGM  CHTD  பரிசீலனை செய்வதாக கூறிஇருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

S.தங்கராஜ்.
மா.செ.


 



Sunday, 20 September 2020

 

Please click here to see the OA No. 100/1329 of 2020 before Principal bench of CAT

Please CLICK this LINK

Friday, 18 September 2020

 

இன்று தோழர் D .கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவின் தமிழாக்கம் 
பலர் நன்கு புரிந்து கொள்ள 
வசதியாக இப்போது வெளியிடப்பட்டுள்ளது

 

Dear comrades
As already informed our case for pension revision was filed before Hon PB CAT Newdelhi on 10/9/2020.
Our lawyer Shri Gautam Narayan informed few minutes back that the case is admitted today and notice was received by Shri Kaushik, counsel for respondents. The case is posted to 18/11/2020.
The first step is over and let us hope to win the case.
An excellent and chronological narration of our case by Com. D Gopalakrishnan CHQ Vice President through  video is given below. Every member should listen to it.
P Gangadhara Rao GS.
AIBSNLPWA.

Com. DG has delivered a very good speech with facts and fugures. To listen his speech, click the link given. Switch on your speakers.

 MRS FORMS




 

தோழர்களே,

2020 முதல் ஓய்வூபெற்ற தோழர்கள் தங்களது MRS  அட்டயை புதுப்பித்துக்கொள்ள அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.தோழர்களின் சிரமத்தை உடனடியாக மாநிலசங்கம் திரு.பாண்டியன் DGM  HR  உடன் தொடர்பு கொண்டு பேசினோம்.அவர் சம்பத்ப்பட்ட அனைத்து Forms களையும்  VAN யில் போடுவதாகவும் அதை Down load செய்து எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆகவே MRS Card புதுப்பிக்கஉள்ள தோழர்கள் நேரடியாக A/o Pay அலுவலகம் சென்று Form Down Load எடுத்து பூர்த்தி செய்து DGM Admn HR அலுவலகத்தில் கொடுத்து MRS Card பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

நமது வேண்டுகோளை ஏற்று செயல்படுத்திய. DGM  HR அவர்களுக்கு மாநிலசங்கத்தின் சார்பாக நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

S.தங்கராஜ்.
மா.செ.


Thursday, 17 September 2020

 


டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைச் செய்தி

 "மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் CGHS திட்டத்தில் இருப்பார்களேயானால், அவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ், எந்த மருத்துவமனையில் உதவி பெற்றாலும், அதற்கான கட்டணத்தை மறுக்கக்கூடாது " என்று

உச்சநீதி மன்றம்  தீர்ப்பளித்துள்ளது. 

திரு. அசோக் பூஷன், அகர்வால் தலைமையிலான நீதிபதிகள் குழு, எந்த நிலையிலும் மத்திய அரசு ஊழியர்கள் மிகச்சிறந்த மருத்துவ உதவியைப் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம், CGHS  மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் என்ற பெயரில் எல்லாம் குறைத்து தரப்படக்கூடாது என்றும், சிறந்த சிகிச்சையைப் பெறுவது அவர்களுக்கான உரிமை (right to have best treatment) என்றும் கூறியுள்ளது.

 சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனை பற்றிய உண்மைத்தன்மையும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா என்ற ஆதாரங்களின் உண்மைத்தன்மை மட்டுமே பார்க்கப்பட வேண்டுமே தவிர, அந்த மருத்துவ மனை பட்டியலில் இடம் பெற்ற அதிகாரபூர்வ மருத்துவமனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழாக்கம்  தோழர்  பிரசன்னா  கோவை