டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைச் செய்தி
"மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் CGHS திட்டத்தில் இருப்பார்களேயானால், அவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ், எந்த மருத்துவமனையில் உதவி பெற்றாலும், அதற்கான கட்டணத்தை மறுக்கக்கூடாது " என்று
உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. திரு. அசோக் பூஷன், அகர்வால் தலைமையிலான நீதிபதிகள் குழு, எந்த நிலையிலும் மத்திய அரசு ஊழியர்கள் மிகச்சிறந்த மருத்துவ உதவியைப் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம், CGHS மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் என்ற பெயரில் எல்லாம் குறைத்து தரப்படக்கூடாது என்றும், சிறந்த சிகிச்சையைப் பெறுவது அவர்களுக்கான உரிமை (right to have best treatment) என்றும் கூறியுள்ளது.
சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனை பற்றிய உண்மைத்தன்மையும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா என்ற ஆதாரங்களின் உண்மைத்தன்மை மட்டுமே பார்க்கப்பட வேண்டுமே தவிர, அந்த மருத்துவ மனை பட்டியலில் இடம் பெற்ற அதிகாரபூர்வ மருத்துவமனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தமிழாக்கம் தோழர் பிரசன்னா கோவை
No comments:
Post a Comment