Wednesday, 24 February 2021

 


 

ஓய்வூதியம் மற்றும் மற்ற பயன்களை பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு முன் ஒரு ஓய்வூதியர் மரணமடைந்து விட்டால் , ஓய்வூதிய தீர்வுகளை அடைவதற்கு  மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை DOP &PW  (ஓய்வூதியர் மற்றும் ஓய்வூதியர் நலன் இலாகா) விளக்குகிறது.


Saturday, 20 February 2021

 

அன்பு நண்பர்களே ,16-02-2021 அன்று மிக சிறப்பாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகளை படம் பிடித்து அவற்றை வெப் சைட்டிலும் மற்றும் வாட்சப் குரூப்களிலும் பதிவிட மிக்க ஆவலாகயிருந்தேன். நிழற்படங்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகு , மாநில செயலரின் கூட்ட நிகழ்வின் தொகுப்பிற்காக காத்திருந்தேன். அவரும் வாட்சப்பில் அருமையாக தொகுத்து அனுப்பியிருந்தார். ஆனால் மீண்டும் கம்பியூட்டரை ஆன் செய்த போது அது ஆன் ஆகாமல் என்னை பதற செய்தது.. உடனே மொபைலில் எடுக்கப்பட்ட 4,5 படங்களை மட்டும் எனது லாப் டாப் மூலமாக வெப் சைட்டிலும் , வாட்சப்பில் போஸ்ட் செய்தேன் . கம்ப்யுட்டர் பிராசஸர் மற்றும் SMPS பழுதான காரணத்தால் அது இயங்க வில்லை . அவைகளை மாற்றியபின் அனைத்து நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.
என்.மோஹன் .  வெப் மாஸ்டர் 

 

கொரோனா பாதிப்பு காரணமாக தோழர் முனி என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட தோழர் முனிவேங்கடசுப்ரமணியம்  கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அட்மிட் ஆகியிருந்தார். ICU-வில் சிகிச்சை பெற்ற அவர் இன்று (20.2.2021) காலை 4 மணி அளவில் காலமானார்.

முன்னாள் நிர்வாக பிரிவு சங்கத்தின் முன்னோடி, Welfare Board உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் தீர்க்கப்பட்ட எண்ணற்ற ஊழியர் நலன் சார்ந்த பிரச்சனைகள். BSNLDEU சங்கத்தின் ..தலைவராக இருந்தபோது ஊழியர் நலன்/நிறுவன நலனை முன்னிறுத்தி அவரின் தலையீடு மற்றும் தனிப்பட்ட முறையில் தோழர்களின் பிரச்சனையை தீர்க்க ஓடோடி வந்து உதவி செய்தது போன்ற மகத்தான சேவைகள் யாராலும் மறக்க முடியாது. தோழர் முனிவேங்கடசுப்ரமணியன் நம் திருத்தணி கிளையில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நம் சங்க செயல்பாடுகளில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு உதவிகள் பல புரிந்துள்ளார்

அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறோம்.

அவரது மனைவியும் இளைய மகனும் கூட  கிங் இன்ஸ்டிடியூட்டில் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Contact Numbaers
93802 82733
94449 02828.Wednesday, 17 February 2021

( செயற்குழு கூட்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட மற்ற படங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் ).
 

 


Sunday, 14 February 2021


 

வில்லிவாக்கம் கிளையின் செயற்குழு கூட்டம் 13-02-2021 அன்று மாலை 3-30 மணிக்கு ஸ்ரீ கனகதுர்கா  துவக்க பள்ளியில் கிளை தலைவர் தோழர் கங்காதரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சமீப காலங்களில் நம்மைவிட்டு மறைந்த நம் கிளையின் தோழர்கள் சுமார் 25 பேர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது 
தோழர்கள் அசோக்குமார் , ஜீவானந்தம் , மாநில பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர் CGHS , புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வில்லிவாக்கம் கிளையின் செயல் குறித்து விரிவாக பேசினார்கள். நிலைமை சீரானால் ஏப்ரல் மாதம் பொதுக்குழு ( General Body ) கூட்டம் நடத்தித்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. VRS ல் வெளியே வந்த வந்தவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தமைக்காக கிளை செயலர் பாராட்டப்பட்டு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.