Saturday, 20 February 2021

 

கொரோனா பாதிப்பு காரணமாக தோழர் முனி என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட தோழர் முனிவேங்கடசுப்ரமணியம்  கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அட்மிட் ஆகியிருந்தார். ICU-வில் சிகிச்சை பெற்ற அவர் இன்று (20.2.2021) காலை 4 மணி அளவில் காலமானார்.

முன்னாள் நிர்வாக பிரிவு சங்கத்தின் முன்னோடி, Welfare Board உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் தீர்க்கப்பட்ட எண்ணற்ற ஊழியர் நலன் சார்ந்த பிரச்சனைகள். BSNLDEU சங்கத்தின் ..தலைவராக இருந்தபோது ஊழியர் நலன்/நிறுவன நலனை முன்னிறுத்தி அவரின் தலையீடு மற்றும் தனிப்பட்ட முறையில் தோழர்களின் பிரச்சனையை தீர்க்க ஓடோடி வந்து உதவி செய்தது போன்ற மகத்தான சேவைகள் யாராலும் மறக்க முடியாது. தோழர் முனிவேங்கடசுப்ரமணியன் நம் திருத்தணி கிளையில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நம் சங்க செயல்பாடுகளில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு உதவிகள் பல புரிந்துள்ளார்

அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறோம்.

அவரது மனைவியும் இளைய மகனும் கூட  கிங் இன்ஸ்டிடியூட்டில் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Contact Numbaers
93802 82733
94449 02828.



1 comment:

  Life Certificate Valid up to 30-11-2025 list is posted below with a LINK to open it. Those whose names are found in it are requested to gi...