Saturday 30 October 2021

 

தோழர்களே அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மாநில செயற்குழு கூட்டம்.
27.10.2021 அன்று காலை 11.00 மணி அளவில் மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் தோழர் M.முனுசாமி அவர்கள் தலைமையில் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகம் 4-வது மாடியில் நடைபெற்றது. மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார் கடந்த காலங்களில் கொரொணா பெருந்தொற்றால் இயற்கை எய்திய அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில தலைவர் தமது தலைமை உரையில் மாநில சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். CGM உடன் சந்திப்பு மற்றும். jt.CCA,  Dy.CCA ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புகளை தலைமை உரையில் தெரிவித்தார். மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ் அமைப்பு நிலையில் கடந்த ஒன்றறை ஆண்டாக கொரொணா காரணமாக கிளையில் கூட்டங்கள் நடத்த முடியவில்லை. சங்க சட்டவிதிகளின் படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளை, மாநில மாநாடுகளை நடத்தவேண்டும். அகில இந்திய சங்கமும் அதை வலியுறுத்தி சிறப்பு சுற்றக்கை அனுப்பி உள்ளது. அதேபோன்று VRS மற்றும் பணி ஓய்வு பெற்ற தோழர்களை நமது அமைப்பில் உறுப்பினர் களாக சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் நமது அகில அமைப்பின் சார்பாக நீதிமன்றத்தின் மூலமாக பென்சன் அனாமலி பிரச்னை தீர்க்கப்பட்ட ஓய்வூதியர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அனைத்து கிளை செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு அவர்களை நமது அமைப்பில் இணைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். நமது மாநில சங்கத்தின் உறுப்பினர்கள் 5000 ஆக உயர்ந்து உள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை உயர பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். மாதவரம் பூந்தமல்லி போன்ற பகுதிகளில் புதிய கிளைகள் துவங்கப்பட வேண்டும்.
அமைப்பு நிலை விவாதத்தில் கிளை செயலாளர்கள் தோழர் M.முனுசாமி காஞ்சி, தோழர் A.S.வைத்தியநாதன் வில்லிவாக்கம், தோழர் G.வீரபத்திரன் சைதாப்பேட்டை, தோழர் M.பாஸ்கரன் மைலாப்பூர், தோழர் T.பிச்சை மோகன்ராஜ்   கல்மண்டபம், தோழர் G.ஆனந்தன் வேளச்சேரிதோழர் C.ஒளி செங்கல்பட்டு, தோழர் V.N.சம்பத் குமார் அண்ணாநகர்தோழர் S.சாம்பசிவம் கோடம்பாக்கம் ஆகியோர் தங்களின் கிளை பற்றியும் மாநாடு நடத்துவது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள்.
மாநிலசங்க நிர்வாகிகள் தோழர் M.கோவிந்தராஜன், தோழர் T.ஜீவானந்தம் ஆகியோர் கிளை மாநாடுகளை முடித்து மாநில மாநாட்டை நடத்த வேண்டும் என்றார்கள். தோழர் G.நடராஜன். ..உதவி தலைவர், தோழர் T.S.விட்டோபன் ..பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
1.கிளை செயலாளர்கள் கிளைகூட்டங்களை நடத்தி மார்ச் மாதம் 2022.க்குள் கிளை மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் 2022. மாநில மாநாட்டை நடத்த வேண்டும்

2.மாதவரம் பூந்தமல்லி பகுதியில் புதிய கிளைகள் அமைக்க வேண்டும்.
3.பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் Plastic ID  அட்டை வழங்க வேண்டும்.
4. CGHS ல்  ஏற்படுகின்ற பிரச்னைகளை பென்சனர் பெடரேசன் அமைப்பின் மூலமாக தீர்க்க. வேண்டும்
5. நிலுவையில் உள்ள அனைத்து MRS மருத்துவ பில்களையும் தீர்த்து வைக்க வேண்டும்.
6.FMA  (Fixed medical allowance) பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்க்க வேண்டும்.
7. GSM line phone வைத்திருப்போரின் Life certificate கொடுப்பது சம்பந்தமாக போன்ற பிரச்னைகளை தீர்க்க முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது.
கொரொணா தொற்றை பொருட்படுத்தாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்கள் வழங்கிய அனைவரையும் மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டுகின்றோம்.
நன்றி.
S.தங்கராஜ். 
மா.செ
29.10.2021.

 PENSIONERS' PATRICA NOV- DEC 2021

E-JOURNAL.


Saturday 23 October 2021

 

                                                                        







Tuesday 12 October 2021

                                             THE READY RECKNOR


Below a link is given. If you click on it you will get Nine Tables in Excel to know monetary benefit derived from the order on Pension Anomaly. One table for each month from October 2000 to June 2001.

1. Choose the particular table for the month you retired. For example; if you had retired in November 2000 choose Table No.2

2. On top, two figures are given in RED colour, 5000 and 6000. 5000 is the basic pension granted in 2002 after introduction of IDA scales in BSNL, calculated on the basis of ten months average basic pay, partly in CDA and partly in IDA. 6000 is the new Basic Pension to be given in accordance with the order dated 7-10-2021. Replace the two figures with your old basic pension and new basic pension. Total amount of arrears (Up to September 2021) including additional pension of 20% will appear on the top itself. Detailed calculations are available below.

                CLICK HERE TO SEE EXCEL CALCULATION


Sunday 10 October 2021

 



 

தோழர்களே,
AIBSNLPWA அண்ணா நகர் கினளயின் அக்டோபர்  மாதக் கூட்டம்,          09-10-2021 (2nd Saturday)அன்று காலை 10-00மணிக்கு அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடை பெற்றது. தோழர் செல்லையா தலைமை வகித்தார்.
அஞ்சலிக்கு பிறகு  கிளை செயலரின் வரவேற்புரையில் பிரச்சனைகளை  சுருக்கமாக எடுத்துரைத்தார்.
Pension Anomaly உத்தரவால் பயன் பெறும் தோழியர்கள்
A. இந்திரா மற்றும் விஜயலட்சுமி வெங்கடராமன் ஆகியோர்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்க பட்டனர். தோழியர் ஜானகி கிருஷ்ணசாமி அவர்கள் கலந்து கௌள்ளவில்லை. அகில இந்திய துணை தலைவர் G. நடராஜன், மத்திய சங்க பொருளாளர்
T.S. விட்டோபன் ,மாநில துணைதலைவர் மூர்த்தி , மாநில பொருளாளர் M . கண்ணப்பன்  சிறப்புரை ஆற்றினர்.
8 புதிய தோழர்கள் சங்கத்தில்  இணைந்தனர். Pension Revision, Pension Anomaly போன்ற பிரச்னைகள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  
கிளை மாநாட்டை 2021 டிசம்பர் அல்லது 2022 ஜனவரி   மாதத்தில். நடத்துவது என ஒரு மனதாக முடிவடுக்க பட்டது.
 65 தோழர்கள் பங்கேற்றனர்
தோழர்அக்ஷய் குமார் கிளை உதவி செயலர்  அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
அடுத்த கூட்டம்!
November 13-11 2021,  2nd saturdy! அன்று நடைபெறும் என்று அறிவிக்கபட்டது.   
கூட்டத்தில் எடுக்கபட்ட, சில புகைப்படங்கள் கீழே காணலாம்.
V. N. சம்பத்குமார்
கிளை செயலாளர்


Thursday 7 October 2021

Circle Executive Committee Meeting of ChTD  was conducted on 23-04-2024 in Jivana Jyoti Hall, Egmore in a grand manner. In spite of Chitra P...