அன்பு நண்பர்களே ,16-02-2021 அன்று மிக சிறப்பாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகளை படம் பிடித்து அவற்றை வெப் சைட்டிலும் மற்றும் வாட்சப் குரூப்களிலும் பதிவிட மிக்க ஆவலாகயிருந்தேன். நிழற்படங்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகு , மாநில செயலரின் கூட்ட நிகழ்வின் தொகுப்பிற்காக காத்திருந்தேன். அவரும் வாட்சப்பில் அருமையாக தொகுத்து அனுப்பியிருந்தார். ஆனால் மீண்டும் கம்பியூட்டரை ஆன் செய்த போது அது ஆன் ஆகாமல் என்னை பதற செய்தது.. உடனே மொபைலில் எடுக்கப்பட்ட 4,5 படங்களை மட்டும் எனது லாப் டாப் மூலமாக வெப் சைட்டிலும் , வாட்சப்பில் போஸ்ட் செய்தேன் . கம்ப்யுட்டர் பிராசஸர் மற்றும் SMPS பழுதான காரணத்தால் அது இயங்க வில்லை . அவைகளை மாற்றியபின் அனைத்து நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.
என்.மோஹன் . வெப் மாஸ்டர்
No comments:
Post a Comment