Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Tuesday, 31 March 2020
AN APPEAL FROM OUR
GENERAL SECRETARY.
அன்புள்ள தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரோனவை அறவே
ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்.
ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்.
இம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதிய த்தை தமிழக முதலைமைச்சரின் COVID 19, நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம். நெட் பாங்கிங் வசதி உள்ளவர்கள் பணத்தை Online ல் நம் மாநில வங்கிக்கணக்கில் பற்று வைக்கலாம் .நெட்பாங்கிங் வசதி இல்லாதவர்கள் ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money Transfer செய்யலாம். இந்த விஷயத்தில் அனைத்து கிளை செயலர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நம்மால் முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம். நம்மால் இயன்ற உதவியை நல்கிடுவோம். நாட்டின் முன்னேற்றத்திற்கும் , நம் சந்ததியினரின் எதிர்கால நல்வாழ்விற்கும் பாதுகாப்பு அரணாய் நின்றிடுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
M .முனுசாமி மாநில தலைவர்.
S .தங்கராஜ் மாநில செயலர்.
M .கண்ணப்பன் மாநில பொருளர்.
BANK ACCOUNT PARTICULARS
BANK NAME : INDIAN BANK.
BRANCH NAME : LAKE AREA NUNGAMBAKKAM. CHENNAI 34
ACCOUNT NAME : AIBSNL PWA
SB A/C NO :705544076
IFSC CODE : IDIB000N033.
பணம் அனுப்பிய தோழர்கள் பணம் அனுப்பிய விபரங்களை மாநில பொருளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களுக்கு மொபைல் எண் 94446 48494 க்கு SMS செய்யவும்.
Thursday, 26 March 2020
Wednesday, 25 March 2020
Tuesday, 24 March 2020
Monday, 23 March 2020
Friday, 20 March 2020
வணக்கம்.
உலகமெங்கும்
கொரானா வைரஸ் நோய் தன்
கோரப்பிடியினை மனித உயிர்களின் மேல்
தாக்கி மரணமடையச் செய்து வருகிறது . இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் கொரானா வின் தாக்கம்
இருப்பதாக செய்திகள் வருகின்றன .தமிழ்நாட்டில் ஒரு சிலர் இந்நோயினால்
மரணமடைந்துள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.
இந்நோய்
மனிதர்கள் மூலமாக , காற்றில் பறந்து தாக்குகிறது .60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை கொரானா வைரஸ் மிக சுலபமாக தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு
இன்றுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை
என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் .
இந்நோய்
பரவுவதை தடுக்க நாம் வீட்டிலேயே
இருந்து விட்டால் நம்மை காத்துக் கொள்ள
முடியும். நம் பாரத பிரதமரும்
தம் தேசிய பரப்புரையில் 22-03-2020 ஞாயிறு காலை
7-00 மணியிலிருந்து இரவு 9-00 மணிவரை வெளியில் எங்கும்
போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி கூறியுள்ளார். அதைப்போல
நாமும் ஞாயிறு அன்று எல்லா
வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு
வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மையும் , நாட்டையும் கொரானா நோயிலிருந்து பாதுகாப்போம் .
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் ! தேசத்திற்கு வளம் சேர்த்திடுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
S . தங்கராஜ் ,
மாநில செயலர் ,
மற்றும் சங்க நிர்வாகிகள்.
AIBSNLPWA
சென்னை தொலைபேசி மாநிலம்.
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் ! தேசத்திற்கு வளம் சேர்த்திடுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
S . தங்கராஜ் ,
மாநில செயலர் ,
மற்றும் சங்க நிர்வாகிகள்.
AIBSNLPWA
சென்னை தொலைபேசி மாநிலம்.
Thursday, 19 March 2020
தமிழ்நாட்டில்
புதிய சிஜிஎச்எஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுமா?
நாடாளுமன்றத்தில்
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்
கேள்வி
எண் 1357
கீழ்காணும்
கேள்விகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
விளக்கம் தருவாரா?
(அ) நடுவண் அரசின் உடல்
நலத்திட்டத்தின் கீழ் (Central Government Health
Schemes-CGHS) நாடு முழுமையும் எத்தனை மருந்தகங்கள், நல
மையங்கள் உள்ளன. மாநில வாரியான
பட்டியல் தருக.
(ஆ) புதிய மருந்தகங்களை அமைப்பதற்கான
விதிமுறைகள் என்ன?
(இ) இந்தத் திட்டத்தின், தமிழ்நாட்டில்,
எத்தனை தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன?
(ஈ) பெருகி வரும் தேவைகளுக்கு
ஏற்ப, தமிழ்நாட்டில் புதிய மருந்தகங்களை அரசு
நிறுவுமா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த
தகவல்களைத் தருக.
இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே
அளித்த விளக்கம்
(அ) நாடு முழுமையும் உள்ள,
எதிர்முறை (அலோபதி) மருத்துவ மையங்கள்
எண்ணிக்கை குறித்த விவர அட்டவணை,
இணைப்பாகத் தரப்பட்டு இருக்கின்றது.
(ஆ) புதிய மருந்தகங்களை நிறுவிடுவதற்கான
அளவுகோல்
1, அந்த
ஊரில் ஏற்கனவே இத்தகைய மையம்
இருந்தால், குறைந்தது புதிதாக 2000 அட்டைதாரர்கள் (பணியில் இருக்கின்ற அரசு
ஊழியர்கள், ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்கள்)
இருந்தால் மட்டுமே புதிய கிளை
நிறுவிட முடியும்.
2. இந்தத்
திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற
ஊரில், அதை நீட்டிக்க, விரிவுபடுத்த,
குறைந்தது 6000 பேர் அட்டை வைத்து
இருக்க வேண்டும்.
3. இந்தத்
திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், 33 மருத்துவமனைகளும்,
6 ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம், இணைப்பு
அட்டவணை இரண்டில் தரப்பட்டுள்ளது.
4. தமிழ்நாட்டில்
புதிய மருந்தகங்களை அமைப்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தத்
திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டுள்ள
மருத்துவமனைகள்.
1. சிஎஸ்ஐ
கல்யாணி பொது மருத்துவமனை, மயிலாப்பூர்,
2. சிஎஸ்ஐ
ரெய்னி மருத்துவமனை, சென்னை 21
3. மியோட்
மருத்துவமனை, மணப்பாக்கம், சென்னை
4. நோபிள்
மருத்துவமனை, புரசைவாக்கம், சென்னை
5. சௌந்தரபாண்டியன்
எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை,
அண்ணாநகர், சென்னை
6. சுகம்
மருத்துவமனை, திருவொற்றியூர், சென்னை
7. பிரண்டியர்
லைப்லைன் மருத்துவமனை, முகப்பேர் மேற்கு, சென்னை
8. பார்வதி
ஆர்த்தோ மருத்துவமனை, குரோம்பேட்டை சென்னை
9. காவேரி
புற்றுநோய் மருத்துவமனை, மயிலாப்பூர், சென்னை
10. கே.கே.ஆர் காது,
மூக்கு, தொண்டை மருத்துவமனை, கீழ்பாக்கம்,
சென்னை
11. டிரினிடி
அக்யு கேர் மருத்துவமனை, கீழ்பாக்கம்,
சென்னை
12. பில்ரோத்
மருத்துவமனை, செனாய் நகர், சென்னை
13. இந்து
மிஷன் மருத்துவமனை, தாம்பரம் மேற்கு, சென்னை.
14. அப்பல்லோ
புற்றுநோய் மருத்துவமனை, நந்தனம், சென்னை
15. மணக்குள
விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி
16. புதுவை
மருத்துவ அறிவியல் மையம், கணபதிசெட்டிகுளம், புதுச்சேரி
17. மகாலெட்சுமி
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல்,
சென்னை.
சிறப்பு
கண் மருத்துவமனைகள்.
1 முதல்
4 வரை. டாக்டர் அகர்வால் கண்
மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, பெரம்பூர், தாம்பரம், போரூர்
5. உதி
கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
6. உமா
கண் மருத்துவமனை, அண்ணா நகர், சென்னை
7. அரவிந்த்
கண் மருத்துவமனை, தவளகுப்பம்,புதுச்சேரி
8. டிஆர்ஆர்
கண் மருத்துவமனை, பூவிருந்தவல்லி, சென்னை
9. ஜோதி
கண் மருத்துவமனை, புதுச்சேரி -1
10. இராதா
திரிநேத்ராலயா, தியாகராய நகர், சென்னை
11. டாக்டர்
அரவிந்த் கண் மருத்துவமனை, முகப்பேர்
மேற்கு, சென்னை
12. நிர்மல்
கண் மருத்துவமனை, தாம்பரம் மேற்கு, சென்னை
13.ராஜன்
கண் மருத்துவமனை, தியாகராய நகர், சென்னை
14. டாக்டர்
அகர்வால் மருத்துவ மையம், ராஜிவ்காந்தி சதுக்கம்,
புதுச்சேரி.
பல் மருத்துவமனைகள்.
1. டாக்டர்
குப்தா பல் சிறப்பு மருத்துவமனை,
புரசைவாக்கம், சென்னை
2. டாக்டர்
ரிமோ பல் சிறப்பு மருத்துவமனை,
ஆவடி, சென்னை
நோய் முதல் நாடும் ஆய்வகங்கள்
(Diagnostic Centre)
1. பிராம்ப்ட் பிரிசைஸ்
ஆய்வகம், ஆவடி, சென்னை
2. ஆண்டர்சன்
ஆய்வகம், புரசைவாக்கம், சென்னை
3. ஆர்த்தி
ஸ்கேன்ஸ், வடபழநி, சென்னை
4. சங்கரா
ஆய்வகம், அபிராமபுரம், சென்னை
5. விஆர்ஆர்
ஆய்வகம், தியாகராய நகர், சென்னை
6. பாரத்
ஸ்கேன்ஸ், இராயப்பேட்டை, சென்னை.
நன்றி
வைகோ MP
Our Leaders Meet
CGM, GM(F) and DGM(F)
Of
Chennai Telephone District
தோழர்களே,
சென்னை
தொலைபேசி CGM திரு சஞ்சீவி , GM (F) திரு .கல்யாண் சாகர்,
DGM (F) திருமதி
லீலாவதி ஆகியோருடன் மாநில சங்க நிர்வாகிகள்
சந்திப்பு. 19.03.2020 அன்று
தோழர்கள் M.முனுசாமி மா.த. S.தங்கராஜ் மா.செ. M.கண்ணப்பன் மா.பொ. V.N.சம்பத்குமார். கி.செ ஆகியோர்
சந்தித்து
பேசினார்கள்.
CGM அவர்களிடம் VRS 2019 தோழர்களுக்கு குடியிருப்பை மேலும் நீடிக்க
காலஅவகாசம் வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளோம்.
பரிசீலனை செய்வதாக கூறினார் .
GM (F) அவர்கள் December 2018 முதல் நிலுவையில் உள்ள
மருத்துவ பில்களை விரைவில் தீர்ப்பதாக
கூரினார்.
DGM (F) அவர்கள்
VRS 2019 தோழர் பிரச்சனைகளை உடனடியாக
தீர்க்கப்படும் என்றார். மூவரும் நமது மாநில
மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
Monday, 16 March 2020
அகில
இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 14-03-2020அன்று மாலை 4.00 மணியளவில் கிளை உதவி செயலர்
தோழர் C.கேசவன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைவர் தொடக்க உறையுடன் VRSல் பணி ஓய்வு
பெற்ற புதிய உறுப்பினர்கள் 45 உறுப்பினர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்க ப்பட்டனர். கிளை செயலர் B.தியாகராஜன் கிளை மாநாடு ஏப்ரல் 17,18 தேதிகளில் நடத்துவது குறித்து பேசினார். கூட்டத்தில் அதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்து நிதியும் பெறப்பட்டது.
தோழர்
T.S.விட்டோபன் அ.இ.பொ.அவர்கள்அகில இந்திய அளவில் நமது சங்க வளர்ச்சி, பென்சன் மாற்றம் சம்பந்தமாக நாம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி விளக்கமாக பேசினார்கள். மாநில செயலர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் மாநில மாநாடு சம்பந்தமாகவும் பேசினார்.கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் G.அரி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
B.தியாகராஜன்
கிளை
செயலர்
அம்பத்தூர்
Saturday, 14 March 2020
வில்லிவாக்கம்
கிளைக்கூட்டம் இன்று மாலை (14-03-2020) அன்று கனக துர்கா மேநிலைப் பள்ளி வளாகத்தில் மகளிர் கூட்டமாகவும் நடைபெற்றது. 25 மகளிர் உட்பட சுமார் 200 உறுப்பினர்களுக்கு மேல் கலந்து
கொண்ட இக்கூட்டத்திற்கு தோழர் அசோக்குமார் உப தலைவர் தலைமை
ஏற்று நடத்தினார். தோழர் வைத்தியநாதன் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்
தோழர்கள்
கோவிந்தராஜன் , ஜீவா ,கண்ணப்பன் , தோழியர்கள் ரத்னா , குணசுந்தரி ரங்கநாதன் , மாலா மற்றும் பலர் மகளிர் தினம் , CGHS , VRS , மாநில மாநாடு ஆகியவை குறித்து பேசினார்கள். மங்கையர்கள் அனைவரும் ரோசா மலர் கொடுத்து , கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு பலத்த கைத்தட்டல்களுக்கிடையே வெகுவாக கௌரவிக்கப்பட்டார் . VRS ல் ஒய்வு பெற்றுள்ள
இளம் ஓய்வூதியர்கள் சுமார் 80க்கு மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் . அவர்களும் கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் .அனைவருக்கும் இனிப்பு , காரம் , காபி வழங்கப்பட்டது. சுமார் VRS திட்டத்தில் ஓய்வுபெற்றுள்ள தோழர்கள் 100 பேர்களுக்கு மேல் நம் வில்லிவாக்கம் கிளையில் ஆயட்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி
வரவேற்கிறோம்.
நம்
வில்லிவாக்கம் , சென்னை தொலைபேசி மாநிலத்தின் நம்பர் 1 கிளை இப்போது உறுப்பினர் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி வெற்றி
நடைபோடுகிறது. இந்த அரிய , இனிய புகழ் மிகு இலக்கை அடைய அல்லும் பகலும்
பாடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...
-
It is reliably learnt that our All India Membership Strength as on date has crossed 74000 + . Thanks to all our members.