வில்லிவாக்கம்
கிளைக்கூட்டம் இன்று மாலை (14-03-2020) அன்று கனக துர்கா மேநிலைப் பள்ளி வளாகத்தில் மகளிர் கூட்டமாகவும் நடைபெற்றது. 25 மகளிர் உட்பட சுமார் 200 உறுப்பினர்களுக்கு மேல் கலந்து
கொண்ட இக்கூட்டத்திற்கு தோழர் அசோக்குமார் உப தலைவர் தலைமை
ஏற்று நடத்தினார். தோழர் வைத்தியநாதன் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்
தோழர்கள்
கோவிந்தராஜன் , ஜீவா ,கண்ணப்பன் , தோழியர்கள் ரத்னா , குணசுந்தரி ரங்கநாதன் , மாலா மற்றும் பலர் மகளிர் தினம் , CGHS , VRS , மாநில மாநாடு ஆகியவை குறித்து பேசினார்கள். மங்கையர்கள் அனைவரும் ரோசா மலர் கொடுத்து , கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு பலத்த கைத்தட்டல்களுக்கிடையே வெகுவாக கௌரவிக்கப்பட்டார் . VRS ல் ஒய்வு பெற்றுள்ள
இளம் ஓய்வூதியர்கள் சுமார் 80க்கு மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் . அவர்களும் கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் .அனைவருக்கும் இனிப்பு , காரம் , காபி வழங்கப்பட்டது. சுமார் VRS திட்டத்தில் ஓய்வுபெற்றுள்ள தோழர்கள் 100 பேர்களுக்கு மேல் நம் வில்லிவாக்கம் கிளையில் ஆயட்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி
வரவேற்கிறோம்.
நம்
வில்லிவாக்கம் , சென்னை தொலைபேசி மாநிலத்தின் நம்பர் 1 கிளை இப்போது உறுப்பினர் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி வெற்றி
நடைபோடுகிறது. இந்த அரிய , இனிய புகழ் மிகு இலக்கை அடைய அல்லும் பகலும்
பாடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment