அகில
இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 14-03-2020அன்று மாலை 4.00 மணியளவில் கிளை உதவி செயலர்
தோழர் C.கேசவன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைவர் தொடக்க உறையுடன் VRSல் பணி ஓய்வு
பெற்ற புதிய உறுப்பினர்கள் 45 உறுப்பினர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்க ப்பட்டனர். கிளை செயலர் B.தியாகராஜன் கிளை மாநாடு ஏப்ரல் 17,18 தேதிகளில் நடத்துவது குறித்து பேசினார். கூட்டத்தில் அதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்து நிதியும் பெறப்பட்டது.
தோழர்
T.S.விட்டோபன் அ.இ.பொ.அவர்கள்அகில இந்திய அளவில் நமது சங்க வளர்ச்சி, பென்சன் மாற்றம் சம்பந்தமாக நாம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி விளக்கமாக பேசினார்கள். மாநில செயலர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் மாநில மாநாடு சம்பந்தமாகவும் பேசினார்.கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் G.அரி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
B.தியாகராஜன்
கிளை
செயலர்
அம்பத்தூர்
No comments:
Post a Comment