Tuesday, 31 March 2020

AN APPEAL FROM OUR 
GENERAL SECRETARY.
அன்புள்ள தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரோனவை  அறவே 
ஒழித்திட  மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்.

இம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதிய த்தை தமிழக முதலைமைச்சரின் COVID 19, நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம். நெட் பாங்கிங் வசதி உள்ளவர்கள் பணத்தை Online ல்  நம் மாநில வங்கிக்கணக்கில் பற்று வைக்கலாம் .நெட்பாங்கிங் வசதி இல்லாதவர்கள்   ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money Transfer செய்யலாம். இந்த விஷயத்தில் அனைத்து கிளை  செயலர்களும் உரிய நடவடிக்கை   எடுக்கவும்.   
நம்மால் முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம். நம்மால் இயன்ற உதவியை நல்கிடுவோம். நாட்டின் முன்னேற்றத்திற்கும் , நம் சந்ததியினரின் எதிர்கால நல்வாழ்விற்கும் பாதுகாப்பு அரணாய் நின்றிடுவோம். 
தோழமை வாழ்த்துக்களுடன்,
M .முனுசாமி         மாநில தலைவர். 
S .தங்கராஜ்           மாநில செயலர். 
M .கண்ணப்பன்  மாநில பொருளர்.
BANK ACCOUNT PARTICULARS
BANK NAME       :  INDIAN BANK.
BRANCH NAME  : LAKE AREA NUNGAMBAKKAM. CHENNAI 34
ACCOUNT NAME : AIBSNL PWA
SB A/C NO            :705544076
IFSC CODE             : IDIB000N033.
பணம் அனுப்பிய தோழர்கள் பணம் அனுப்பிய விபரங்களை மாநில பொருளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களுக்கு மொபைல் எண்  94446 48494 க்கு SMS செய்யவும். 

No comments:

Post a Comment

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...