OBITUARY
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Thursday, 26 October 2023
Wednesday, 25 October 2023
CONDOLENCES
V.N. SAMPATHKUMAR, ANNANAGAR Br. SECRETARY
தோழர் சம்பத்குமார் , அண்ணா நகர் கிளை செயலாளர் திடீர் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் NFTE இயக்கத்திலும் பின்னர் நமது ஓய்வூதியர் அமைப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயலாற்றினார். கடைசியாக அவரை அகமதாபாத் மத்திய செயற்குழுவில் சந்தித்தேன். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் GN அவர்களின் மிக நெருங்கிய நண்பர். என் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். DG
𝙲𝙾𝙽𝙳𝙾𝙻𝙴𝙽𝙲𝙴𝚂
We are deeply saddened and shocked to hear the news of sudden demise of Comrade Sampath Kumar. He was very much devoted to association and contributed for the growth of our organization. He is remembered for his valuable contribution to our association. He was seen in recent cwc at Ahmedabad. It is a big loss to Annanagar Branch in particular. We mourn his demise and share our grief with his family & friends.
V Vara Prasad / GS
வருந்துகின்றோம்.
அண்ணாநகர் கிளையின் செயலாளரும் மூத்த தோழருமான தோழர் V.N.சம்பத் குமார் அவர்கள் இன்று 25.10.2023 அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்த்தாருக்கு மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அண்ணாநகர் கிளை செயலர்
ஒய்வு பெற்றது 30-06-2006
இறப்பு ; 26-10-2023 காலை 10.30 மணி
விலாசம் A H - 187, 3 வது தெரு ,
சாந்தி காலனி ,
அண்ணாநகர் கிழக்கு சென்னை-30
அமிஞ்சிக்கரை காவல் நிலையம் எதிரில் ,
கைப்பேசி எண்கள் : 94445 23040
94984 80040
அன்னாரின் இறுதி காரியங்கள் 26-10-2023
காலை 10-00 மணியளவில் நடைபெறும்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறோம்.
Monday, 23 October 2023
Saturday, 21 October 2023
Wednesday, 18 October 2023
NEWS FROM OUR CIRCLE SECRETARY
தோழர்களே!
17.10.2023 காலை திருமதி. கௌதமி Jt.CCA அவர்களை நமது மாநில. சங்கத்தின் சார்பாக சந்தித்து பல்வேறு பிரச்சனைகளை விவாதித்துள்ளோம்
1.FMA.case.
ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள Fixed medical allowance விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Fixed.
Medical allowance Apply செய்த தேதியில் இருந்து வழங்கப்படும். சென்னை தொலைபேசி சார்பாக 20.ஓய்வூதியோர் FMA apply செய்து உள்ளார்க ள்.
2. குடும்ப ஓய்வூதியம் பெற உள்ளவர்கள் இனிமேல் BSNL பென்சன் Section போக வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வூதியர் இறந்து விட்டால் CCA அலுவலகத்தில் தகவலை கொடுத்து அங்கேயே குடும்ப ஓய்வூதியம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுந்த ஆதாரத்துடன் செல்ல வேண்டும். வாரிசு குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மட்டுமே BSNL பென்சன் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
3. மேலும் திருமதி ரீட்டா தேவாரம் Family
pension M.மைத்ரேயி, நோசினா கவிதா, பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரின் வாரிசு பென்சன். திரு.ரமேஷ் பாபு T.கல்யாணம் ஆகியோர் பென்சன் பிரச்சனைகளை தீர்க்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
4. Life certificate கொடுப்பதற்கு CCA அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள தகவலை நிராகரிக்கும்படி Jt.CCA வேண்டிக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் வெளியிட படுகின்ற Life certificate கடைபிடிக்க வேண்டும். CCA அலுவலக 1-மாடியில் Life certificate வழங்குவதற்கு அலுவலர் உள்ளார். தங்களின் ஒரிஜினல் , பென்சன் புத்தகம். ஆதார் மற்றும் பான், வங்கி பென்சன் புத்தகம் தவறாது தங்களின் மொபைல் எண் அனைத்திலும் ஒரு ஜெராக்ஸ் நகல் எடுத்து செல்ல வேண்டும்.
5. முதல் கட்டமாக பென்சனர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பேச்சு வார்த்தையில் மாநில சங்கம் சார்பாக தோழர் M.முனுசாமி மா.தலைவர், தோழர். S.தங்கராஜ் மா.செயலாளர், தோழர்கள்.J.ராஜேந்திரன் மற்றும் P.சுப்பிரமணியன் மா.உ.செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நன்றி.
S.தங்கராஜ். மா.செ.
Tuesday, 10 October 2023
09-10-2023 திங்கள் அன்று எழும்பூர் ஜீவன ஜோதி ஹாலில் சென்னை தொலைபேசி மாநிலத்தின் செயற்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் M .முனுசாமி மாநில தலைவர் தலைமையேற்றார் , மாநில செயலர் தோழர் S .தங்கராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார் தோழர்கள் DG , TS விட்டோபன் , M .கோவிந்தராஜன் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய சங்க துணைத் தலைவர் தோழர் M .அரங்கநாதன் , M .கண்ணப்பன் உரை நிகழ்த்தினார்கள்.
ஓய்வூதிய மாற்றத்திற்கான நம் கோரிக்கைகளை PB CAT முழுமையாக ஏற்று தீர்ப்பு 20-08-2023 அன்று வெளியிட்டுள்ளது. அதற்கான அனைத்து தஸ்தாவேஜுகளை முறைப்படி தயாரித்து நம் வக்கீல்கள் வாதிட input ஆக கொடுத்த தோழர் DG க்கு விண்ணதிர கைத்தட்டல்களுடன் standing ovation அளிக்கப்பட்டது.
நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு ..
Tuesday, 3 October 2023
S.தங்கராஜ்
மா.செ.
Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...
-
It is reliably learnt that our All India Membership Strength as on date has crossed 74000 + . Thanks to all our members.