NEWS FROM OUR CIRCLE SECRETARY
தோழர்களே!
17.10.2023 காலை திருமதி. கௌதமி Jt.CCA அவர்களை நமது மாநில. சங்கத்தின் சார்பாக சந்தித்து பல்வேறு பிரச்சனைகளை விவாதித்துள்ளோம்
1.FMA.case.
ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள Fixed medical allowance விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Fixed.
Medical allowance Apply செய்த தேதியில் இருந்து வழங்கப்படும். சென்னை தொலைபேசி சார்பாக 20.ஓய்வூதியோர் FMA apply செய்து உள்ளார்க ள்.
2. குடும்ப ஓய்வூதியம் பெற உள்ளவர்கள் இனிமேல் BSNL பென்சன் Section போக வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வூதியர் இறந்து விட்டால் CCA அலுவலகத்தில் தகவலை கொடுத்து அங்கேயே குடும்ப ஓய்வூதியம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுந்த ஆதாரத்துடன் செல்ல வேண்டும். வாரிசு குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மட்டுமே BSNL பென்சன் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
3. மேலும் திருமதி ரீட்டா தேவாரம் Family
pension M.மைத்ரேயி, நோசினா கவிதா, பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரின் வாரிசு பென்சன். திரு.ரமேஷ் பாபு T.கல்யாணம் ஆகியோர் பென்சன் பிரச்சனைகளை தீர்க்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
4. Life certificate கொடுப்பதற்கு CCA அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள தகவலை நிராகரிக்கும்படி Jt.CCA வேண்டிக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் வெளியிட படுகின்ற Life certificate கடைபிடிக்க வேண்டும். CCA அலுவலக 1-மாடியில் Life certificate வழங்குவதற்கு அலுவலர் உள்ளார். தங்களின் ஒரிஜினல் , பென்சன் புத்தகம். ஆதார் மற்றும் பான், வங்கி பென்சன் புத்தகம் தவறாது தங்களின் மொபைல் எண் அனைத்திலும் ஒரு ஜெராக்ஸ் நகல் எடுத்து செல்ல வேண்டும்.
5. முதல் கட்டமாக பென்சனர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பேச்சு வார்த்தையில் மாநில சங்கம் சார்பாக தோழர் M.முனுசாமி மா.தலைவர், தோழர். S.தங்கராஜ் மா.செயலாளர், தோழர்கள்.J.ராஜேந்திரன் மற்றும் P.சுப்பிரமணியன் மா.உ.செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நன்றி.
S.தங்கராஜ். மா.செ.
No comments:
Post a Comment