Tuesday, 3 October 2023

 

தோழர்களே!
சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டம்.
நமது மத்திய செயற்குழு கூட்டம் 2023 அக்டோபர் 1மற்றும் 2 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்றது. தோழர் D.கோபாலகிருஷ்ணன் அகில இந்திய தலைவர்  தலைமையில் நடைபெற்றது.தோழர்.
Vவரபிரசாத் அகில இந்திய பொதுச்செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.தோழர் D.கோபாலகிருஷ்ணன் .அகில இந்திய தலைவர்
தலைமை உரையில் பென்சன் மாற்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் அதை விரைவில் அமுல் படுத்த வேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
தோழர் V.வரபிரசாத் அகில இந்திய பொதுச்செயலாளர் சங்க செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.தோழர் T.S.விட்டோபன் அகில இந்திய பொருளாளர் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான ஆடிட் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கையும் 31.08.2023 வரையிலான தணிக்கை செய்யப்படாத வரவு செலவு கணக்கையும் சமர்பித்தார்.நமது மாநில சங்கத்தின் சார்பாக தோழர் S.தங்கராஜ் மாநில சங்கசெயல்பாடுகள்
அகில இந்திய சங்கம்
தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பற்றி பேசினார்.தோழர் G.நடராஜன். அ.இ.து.தலைவரின் ராஜினாமா ஏற்கப்பட்டு நமது மாநில செயற்குழு வில் ஏகமனதான தேர்தெடுக்கப்பட்ட தோழர். M.அரங்கநாதன் அவர்களை அகில இந்திய துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கலந்துகொண்ட அகில இந்திய நிர்வாகிகள் மாநில சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.தோழர். V.வரபிரசாத் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்வுகாண முயற்சி எடுக்க்கப்படும் என்றார்.
இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறவும்
இடவசதி உணவு அனைத்தையும் எந்தவித குறைபாடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்த குஜராத் மாநில சங்க வரவேற்பு குழுவை மத்திய செயற்குழு கூட்டம் பாராட்டி நன்றி கூறி இனிதே நிறைவு பெற்றது.மேலும் விபரங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில்.
நன்றி.

S.தங்கராஜ் 

மா.செ.


VIDEOs : Com. D.Gopalakrishnan CHQ President speaks 



No comments:

Post a Comment