OFFICE SHIFTING.
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Saturday, 31 October 2020
Friday, 30 October 2020
Wednesday, 28 October 2020
Saturday, 24 October 2020
Friday, 23 October 2020
Wednesday, 21 October 2020
FILING OF INCOMETAX
வருமான
வரி தாக்கல்
வருமான
வரி தாக்கல் செய்ய 2020 நவம்பர்
30 கடைசி நாளாகும்.
சென்ற
ஆண்டுக்கான FORM-16 படிவம் தமிழ்நாடு INTRANET இணையத்தில் கிடைக்கின்றது.
FORM-16 படிவத்தில்
உள்ள பல விவரங்கள் வருமான
வரி இலாக்காவின் ITR படிவத்தில் இல்லை. FORM-16 படிவத்திலும் பல விவரங்கள் காட்டப்படவில்லை.
சில விவரங்கள் முழுமையாய் இல்லை. வீட்டு வாடகை, வீட்டுக்கடன் வட்டித்தொகை, விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA – தொகையில் வித்தியாசம் தென்படுகின்றன.
எனவே
தோழர்கள் குறிப்பாக விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
பிப்ரவரி மாத ஓய்வூதியம்:-
விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் தங்களது பிப்ரவரி மாத ஓய்வூதியத்தை மொத்த வருமானத்துடன் சேர்த்துக் காண்பிக்க வேண்டும். மார்ச் மாத ஓய்வூதியம் ஏப்ரலில் பெறுவதால் அதனை அடுத்த ஆண்டிற்குத்தான் காண்பிக்க வேண்டும்.
EXGRATIA – தொகை
5 லட்சம்
வரையிலும் EXGRATIA –
தொகைக்கு வரிவிலக்கு உண்டு. ITR படிவத்தில் B 1 (ii) Less :
Allowance என்பதில் கூடுதல் வரிசை ADD செய்து அதில் Sec 10 (10 C) Amount
Received on Voluntary Retirement என்ற
வரிசையில் EXGRATIA –
தொகையைப் பதிவிட வேண்டும்.
விடுப்புச்சம்பளம்
– Leave Salary
DOT காலத்தில்
சேமிக்கப்பட்ட விடுப்பிற்கான விடுப்புச்சம்பளத்திற்கு வருமான வரி இல்லை. BSNL காலத்தில் சேமிக்கப்பட்ட விடுப்புச்சம்பளத்திற்கு 3 லட்சம் வரையிலும் வரி இல்லை. அதற்கு மேல் உள்ள தொகைக்குத்தான் வரி உண்டு. சிலரது FORM-16 படிவத்தில் விடுப்புச்சம்பளம்
BSNL காலத்திற்கானது என்று தவறுதலாக காட்டப்பட்டுள்ளது. எனவே சரியான தொகையை விடுப்புச்சம்பளக் கணக்கில் காட்ட வேண்டும். இல்லையெனில் லட்சக்கணக்கில் வருமான வரி எகிறி விடும்.
LTC தொகை
ஓய்வுக்கு
முன் LTC சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு வருமான வரி இல்லை. எனவே அந்த தொகையை வரிவிலக்கில் காட்ட வேண்டும்.
வீட்டு வாடகை
வாடகை
வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் வாடகைக்கு செலுத்திய தொகைக்கு வரிவிலக்கு பெறலாம். வீட்டு வாடகை செலுத்துபவர்கள் மறவாமல் அதனை வரிவிலக்கில் காட்ட வேண்டும்.
வீட்டுக்கடன்
வீட்டுக்கடன்
பெற்றவர்கள் வட்டித்தொகையை தங்களது வங்கி அளித்த STATEMENT-ல் உள்ளவாறு B2. Type of House Property (v)-ல் காட்ட வேண்டும்.
சிலரது FORM-16 படிவத்தில் இந்த தொகை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.
இலாக்காவில்
HBA கடன் பெற்றவர்களின் முழுத்தொகையும் விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA – தொகையில் கழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த விவரங்கள் FORM-16 படிவத்தில் இல்லை. எனவே அத்தகைய தோழர்கள் உரிய இடத்தில் அந்த தொகையைக் காட்ட வேண்டும்.
சேமிப்பு
– SAVINGS
சேமிப்பு
1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் கணக்கில் காட்ட இயலும். 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவாக சேமிப்பு உள்ளவர்கள் தங்களது குழந்தைகளுக்கு செலுத்திய கல்விக்கட்டணம், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது தனது பெயரிலோ செலுத்திய LIC மற்றும் PLI சேமிப்பைக் கணக்கில் காட்டலாம்.
தோழர்கள்
உரிய முறையில் வருமான வரித்தாக்கல் செய்தால் ஏற்கனவே செலுத்திய வருமான வரி REFUND கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
30 நவம்பர்
2020 க்குள் வருமானவரி தாக்கல் செய்ய வில்லை என்றால் Return பெற முடியாது.
நவம்பர் 30 வரையிலும் கால அவகாசம் இருப்பதால் தோழர்கள் நிதானமாக வருமான வரித்தாக்கல் செய்யவும்..
Tuesday, 20 October 2020
தோழர்களே,
நம் மத்திய சங்க தலைவர் தோழர் P .S .ராமன்குட்டி அவர்கள் இன்று மாலை 7-30 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக இல்லம் வந்து சேர்ந்துள்ளார்கள் . .இல்லத்தில் பூரண ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் . எனவே யாரும் அவருக்கு எந்தவித இடையூறும் செய்யாதவாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தோழர்களின் பிரார்த்தனைகளுக்கும் நல்லதே நடந்துள்ளது. மத்திய சங்கத்தின் சார்பில் அனைத்து தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.Friday, 9 October 2020
தோழர்களே ,
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
சாம்பன் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுகின்ற நம் ஓய்வூதியர்களில், 2019 செப்டம்பர் வரையில் ஒய்வு பெற்றவர்கள் இந்த மாதம் உயிர்வாழ் சான்றிதழ் CCA அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கான மாதிரி படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அரசாங்க பதிவு பெற்ற ஏதாவது ஒரு அதிகாரியிடம் கையொப்பம் பெற்று அல்லது நம் BSNL லில் SDE அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ளவர்களிடம் கையொப்பம் பெற்று , 60 எத்திராஜ் சாலை , முதல் மாடி , எழும்பூர் , சென்னை 60 00 08 அலுவலகத்திற்கு ஸ்பீட் போஸ்ட் ல் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்குவதற்கான ஆயத்த வேலைகள் 20 ஆம் தேதியே துவங்கப்படும். எனவே அக்டொபர் 20 தேதிக்கு முன் கிடைக்கும் படி அனுப்பவும் . பென்ஷன் பெறும் வங்கிக்கு உயிர் வாழ் சான்றிதழ் அனுப்ப வேண்டாம் . இது SAMPANN திட்டத்தில் ஓய்வூதியம் பெருகிறவர்களுக்கான செய்தி.
பணி நிறைவு ஒய்வு பெற்றவர்களில் 80 அல்லது அதற்கு மேல் அகவையுள்ள சூப்பர் சீனியர்கள், தங்களது உயிர்வாழ் சான்றிதழை அக்டொபர் முதல் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 தேதி வரை தங்களது ஓய்வூதியம் பெறுகின்ற வங்கி அல்லது தபால் ஆபிசில் கொடுக்க வேண்டும்.
80 வயதிற்கு கீழ் உள்ள ஓய்வூதியர்கள் அவ்வாறே நவம்பர் முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31 தேதிக்கு முன்பாக ஓய்வூதியம் பெறுகின்ற வங்கி அல்லது தபால் ஆபிசில் கொடுக்க வேண்டும்.
அவசியம் முக கவசம் அணிந்து செல்லவும். வீட்டிலிருந்தே குடிக்கும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லவும். உரிய காலத்தில் உயிர்வாழ் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் ஓய்வூதியம் பெறுவது தடை படும்.
தோழமை வாழ்த்துக்களுடன்.
Thursday, 8 October 2020
Wednesday, 7 October 2020
Tuesday, 6 October 2020
AIBSNLPWA , கோடம்பாக்கம் கிளை ஆயுள் உறுப்பினர் தோழர் K .சபாபதி அவர்கள் இன்று 06-10-2020 நண்பகல் 12.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
பணியில் இருந்தபோது NFPTE சங்க வளர்ச்சிக்கு அயராது
பாடுபட்டார். ஓய்வுபெற்றதும் நம் சங்கத்தில் இணைந்து நம் ஓய்வூதியர் சங்கத்திற்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி பல ஓய்வூதிய தோழர்களை நம் சங்கத்தில் இணைத்து வந்த தோழர் K.சபாபதியின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
AIBSNLPWA
Saturday, 3 October 2020
A |
n initiative under Department of Telecommunications(DoT), and developed by the Controller General of Communication Accounts(CGCA), the Comprehensive Pension Management System or SAMPANN is an integrated Pension application for telecom pensioners. This will provide an integrated approach with online facilities to its pensioners to make pension management more convenient.
To see the full message with practical demo please click the link given below.
Friday, 2 October 2020
Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...
-
It is reliably learnt that our All India Membership Strength as on date has crossed 74000 + . Thanks to all our members.