FILING OF INCOMETAX
வருமான
வரி தாக்கல்
வருமான
வரி தாக்கல் செய்ய 2020 நவம்பர்
30 கடைசி நாளாகும்.
சென்ற
ஆண்டுக்கான FORM-16 படிவம் தமிழ்நாடு INTRANET இணையத்தில் கிடைக்கின்றது.
FORM-16 படிவத்தில்
உள்ள பல விவரங்கள் வருமான
வரி இலாக்காவின் ITR படிவத்தில் இல்லை. FORM-16 படிவத்திலும் பல விவரங்கள் காட்டப்படவில்லை.
சில விவரங்கள் முழுமையாய் இல்லை. வீட்டு வாடகை, வீட்டுக்கடன் வட்டித்தொகை, விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA – தொகையில் வித்தியாசம் தென்படுகின்றன.
எனவே
தோழர்கள் குறிப்பாக விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
பிப்ரவரி மாத ஓய்வூதியம்:-
விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் தங்களது பிப்ரவரி மாத ஓய்வூதியத்தை மொத்த வருமானத்துடன் சேர்த்துக் காண்பிக்க வேண்டும். மார்ச் மாத ஓய்வூதியம் ஏப்ரலில் பெறுவதால் அதனை அடுத்த ஆண்டிற்குத்தான் காண்பிக்க வேண்டும்.
EXGRATIA – தொகை
5 லட்சம்
வரையிலும் EXGRATIA –
தொகைக்கு வரிவிலக்கு உண்டு. ITR படிவத்தில் B 1 (ii) Less :
Allowance என்பதில் கூடுதல் வரிசை ADD செய்து அதில் Sec 10 (10 C) Amount
Received on Voluntary Retirement என்ற
வரிசையில் EXGRATIA –
தொகையைப் பதிவிட வேண்டும்.
விடுப்புச்சம்பளம்
– Leave Salary
DOT காலத்தில்
சேமிக்கப்பட்ட விடுப்பிற்கான விடுப்புச்சம்பளத்திற்கு வருமான வரி இல்லை. BSNL காலத்தில் சேமிக்கப்பட்ட விடுப்புச்சம்பளத்திற்கு 3 லட்சம் வரையிலும் வரி இல்லை. அதற்கு மேல் உள்ள தொகைக்குத்தான் வரி உண்டு. சிலரது FORM-16 படிவத்தில் விடுப்புச்சம்பளம்
BSNL காலத்திற்கானது என்று தவறுதலாக காட்டப்பட்டுள்ளது. எனவே சரியான தொகையை விடுப்புச்சம்பளக் கணக்கில் காட்ட வேண்டும். இல்லையெனில் லட்சக்கணக்கில் வருமான வரி எகிறி விடும்.
LTC தொகை
ஓய்வுக்கு
முன் LTC சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு வருமான வரி இல்லை. எனவே அந்த தொகையை வரிவிலக்கில் காட்ட வேண்டும்.
வீட்டு வாடகை
வாடகை
வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் வாடகைக்கு செலுத்திய தொகைக்கு வரிவிலக்கு பெறலாம். வீட்டு வாடகை செலுத்துபவர்கள் மறவாமல் அதனை வரிவிலக்கில் காட்ட வேண்டும்.
வீட்டுக்கடன்
வீட்டுக்கடன்
பெற்றவர்கள் வட்டித்தொகையை தங்களது வங்கி அளித்த STATEMENT-ல் உள்ளவாறு B2. Type of House Property (v)-ல் காட்ட வேண்டும்.
சிலரது FORM-16 படிவத்தில் இந்த தொகை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.
இலாக்காவில்
HBA கடன் பெற்றவர்களின் முழுத்தொகையும் விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA – தொகையில் கழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த விவரங்கள் FORM-16 படிவத்தில் இல்லை. எனவே அத்தகைய தோழர்கள் உரிய இடத்தில் அந்த தொகையைக் காட்ட வேண்டும்.
சேமிப்பு
– SAVINGS
சேமிப்பு
1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் கணக்கில் காட்ட இயலும். 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவாக சேமிப்பு உள்ளவர்கள் தங்களது குழந்தைகளுக்கு செலுத்திய கல்விக்கட்டணம், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது தனது பெயரிலோ செலுத்திய LIC மற்றும் PLI சேமிப்பைக் கணக்கில் காட்டலாம்.
தோழர்கள்
உரிய முறையில் வருமான வரித்தாக்கல் செய்தால் ஏற்கனவே செலுத்திய வருமான வரி REFUND கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
30 நவம்பர்
2020 க்குள் வருமானவரி தாக்கல் செய்ய வில்லை என்றால் Return பெற முடியாது.
நவம்பர் 30 வரையிலும் கால அவகாசம் இருப்பதால் தோழர்கள் நிதானமாக வருமான வரித்தாக்கல் செய்யவும்..
No comments:
Post a Comment