Sunday 9 February 2020


AIBSNLPWA AMBATTUR BRANCH
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 08-02-2020அன்று மாலை 4.00 மணியளவில் கிளை தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தொடக்க உரையுடன் VRSல் பணி ஓய்வு பெற்ற புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர்.
கிளை செயலர் B.தியாகராஜன் சங்க அமைப்பு மற்றும் CGHS/MRS குறித்து பேசினார். கூட்டத்தில் BSNLEU சங்கத்தை சார்ந்த பல உறுப்பினர்கள் தோழர்கள் M.சாந்தகுமார், V.துரை, T.S.ஶ்ரீதரன் தலைமையில் தங்களை நமது சங்கத்தில் இணைத்துக்கொண்டனர். அதேபோல் NFTEன் மாநில செயலர் தோழர் CKM  விடுத்த அழைப்பை ஏற்று பல தோழர்கள் நமது சங்கத்தில் இணைந்தனர். தோழர்கள் M. சாந்தகுமார், G.அரி, சீனிவாசன் மற்றும் பலர் பேசினார்கள்.
மாநில துனை செயலர் தோழர் S.கிருஷ்னமூர்த்தி
அவர்கள் VRSல் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பென்சன் உட்பட அனைத்து நிலுவைத் தொகைகளை  உடனடியாக கிடைப்பதற்கு நமது சங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை விளக்கமாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்களிடமிருந்து 80 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
தோழர் K.N. மோகன் நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
AIBSNLPWA AMBATTUR BRANCH.


2 comments:

  1. I was attented this meeting very useful message gave from SRI.S.KRISHNAMURTHI.Thank you very much

    ReplyDelete
  2. The meeting was very useful.positive information given by Mr. Krishnamurthy sir.and I request our leaders try to get payslip of January 2020 to vrs optees.Tks.

    ReplyDelete

 " KYP "  SUBMISSION NOTIFICATION: