Sunday, 9 February 2020

08-02-2020 அன்று மாலை 4-30 மணி அளவில் கனக துர்கா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வில்லிவாக்கம் கிளை  சிறப்பாக நடைபெற்றது. கிளைத்தலைவர் தோழர் கங்காதரன் தலைமையேற்று நடத்தினார். VRS ல் ஒய்வு பெற்ற தோழர்கள் திரளாக நம் சங்கத்தில் சேர்ந்துள்ளார். அவர்களில் சுமார் 53 தோழர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் வாழ்த்தி வரவேற்பு நடந்தது .அனைவரும் கைத்தறி துண்டு போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் . அத்துனை  பேரும் மகிழ்ச்சியுடன் சுய அறிமுகம் செய்துகொண்டனர். மாநில செயலர் தோழர் தங்கராஜ் , மாநில பொருளாளர் தோழர்  கண்ணப்பன் , மாநில நிர்வாகி தோழர் ஜீவா, மற்றும் தோழர் ரங்கதுரை , அசோக்குமார் , கிளை செயலர் தோழர் வைத்தியநாதன் ஆகியோர் VRS ல் ஓய்வுபெற்றுள்ள தோழர்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியம் உரிய காலத்தில் கிடைக்க உரிய , தக்க நடவடிக்கைகள் சங்கம் எடுத்து வருகிறது. அனைவரும் CGHS மருத்துவ திட்டத்தில் சேர வேண்டும். என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார்கள் . 
சுமார் 157 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அனைவருக்கும் இனிப்பு, காரம், காபி வழங்கப்பட்டது.
தோழர் E .பாபு நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...