Friday, 10 January 2020


அகில இந்திய பிஎஸ்என்ல் ஓய்வூதியர் நலச்சங்கம், சென்னை மாநிலம் திருநின்றவூர் கிளையின் (AIBSNLPWA CHTD Circle Tirunintravur Branch)  ஜனவரி 2020 ஆண்டின் முதலாவது கூட்டம் 08-01-2020 புதன்கிழமை  கிளையின் தலைவர் தோழர் வீராசாமி அவர்கள் தலமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

மாநில நிர்வாகிகள் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி, தோழர் ஜீவானந்தம், தோழர் அட்சயகுமார், அண்ணா நகர் கிளையின் செயலாளர் தோழர் V.N.சம்பத்குமார்,  குரோம்பேட்டை கிளையின் செயலாளர் தோழர் R.மாரிமுத்து, மற்றும் திருநின்றவூர் கிளையின் 68க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள்.

கிளையின் தலைவர் தோழர் வீராசாமி அவர்கள் பங்கு பெற்ற அனைவருக்கும் திருநின்றவூர் கிளையின் சார்பாக 2020ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துகள், மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

கிளையின் மறைந்த உறுப்பினர்கள் தோழர் சுந்தரேன், தோழர் பக்தவத்சலம், தோழர் சுந்தரம், தோழர் பாண்டியன் துணைவியார் ஆகியார்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும், தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தோழியர் பிரேமாவதியின் கணவர் விரைவில் குணமடையயும் கூட்டு பிரார்த்தனையும், டிசம்பர் & ஜனவரியில் பிறந்த நாள் கொண்டாடும் கிளையின் உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில்  கிளையின் புதிய ஆயுள்உறுப்பினர் தோழியர் வசந்தகுமாரி (Retired Chief Accounts Officer MRS) அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

கிளையின் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் தற்போது கிளையின் அமைப்பு நிலை, இந்த மாதம் இறுதியில் வெளிவரும் விஆர்ஸ் (VRS)ல் BSNL  பணியாளர்களை நமது சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கிளையின் உறுப்பினர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய கூட்டத்தில்  சிறப்பு விருந்தினர்களாக அண்ணா நகர் கிளையின் செயலாளர் தோழர் சம்பத்குமார், தோழர் ஜீவானந்தம்,  தோழர் கிருஷ்ணமூர்த்தி, தோழர் அட்சயகுமார் ஆகியோர் நமது உறுப்பினர்களின் முக்ய பிரச்சனைகளான ஓய்வூதிய மாற்றம், BSNLMRSல் இருந்து  CGHSக்கு மாற்றல் தவிர நமது உடல் ஆரோக்யம் காத்தல் போன்ற தலைப்புகளில் ஏற்புரையாற்றினார்கள்.

கிளையின் பொருளாளர் தோழர் ஸ்ரீனிவாசன் நன்றியுரை உடன் இன்றைய கூட்டம் இனிதே நிறைவு அடைந்தது.

இன்றைய கூட்டத்தின் சில புகைப்பட பதிவுகளை கீழே காணலாம்.

நன்றியுடன்,
கிளையின் செயலாளர்
தோழர் லோகநாதன் 







No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...