Saturday, 11 January 2020

வில்லிவாக்கம் கிளையின் கூட்டம் இன்று 11-01-2020 மாலை கனகதுர்கா உயர் நிலைப்பள்ளி வில்லிவாக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கிளை தலைவர் தலைமை தாங்கினார். முதலாவதாக மறைந்த கிளையைச்சார்ந்த தோழர்கள் மற்றும் முது பெரும் தொழிற்சங்க தலைவர் தோழர் OP குப்தா ஆகியோர் மறைவிற்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கிளையில் ஒரு பாராட்டத்தக்க முறையை மேற்கொண்டுள்ளனர். அதாவது தலைவர் தமது தலைமை உரையை ஒரு திருக்குறள் ஐ எடுத்து இயம்பி அதன் கருத்தையும் விலக்கிக் கூறி பின் தமதுரையை பரப்புகிறார். வாழ்க இந்த சீரிய முறை.
கிளை செயலர் எல்லோரையும் வரவேற்று பேசினார் .வெப் மாஸ்டர் தோழர் மோகன் தமதுரையில் ஸ்மார்ட் போன் வைத்துள்ள தோழர்கள் அனைவரையும் வில்லிவாக்கம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து சங்க செய்திகளை அவ்வப்போது தெரிந்துணர வேண்டினார்.மொபைல் போன் மூலமாகவே நம் இணைய தளத்தையும் கண்டு செய்திகளை விரிவாக,விரைவாக தெரிந்து கொள்ள அறிவுறுத்தினார். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் அசோக்குமார் , ரங்கதுரை ,ஜீவா ,அக்ஷய்குமார் மற்றும் கண்ணப்பன் மிக தெளிவாக , CGHS , mrs , vrs ல் செல்வோரை நம் சங்கத்தில் இணைக்க ஒவ்வொருவரும் எவ்வாறு பாடுபட வேண்டும்? மத்திய சங்கம் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நமக்கும் கிடைக்க செய்ய எடுத்துள்ள வழிமுறைகளை எடுத்துக்கூறினார்கள் . இன்றைய கூட்டத்தில் முன்னாள் மத்திய பொருளாளர் தோழர் குணசேகர், அண்ணா நகர் கிளை செயலர் தோழர் சம்பத்குமார் மற்றும் சைதை தோழர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் அனைவருக்கும் சுவைமிகு  இனிப்பு, காரம் ,தேனீர் ஆகியவை வழங்கப்பட்டன.பொங்கல் வேலைகளுக்கிடையே சுமார் 70உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
கிளை பொருளாளர் தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அனைத்து நிழற்படங்களையும் காண இங்கே கிளிக் செய்யவும்.



No comments:

Post a Comment

    Click here to see Life Certificates validity of Chennai Telephone Circle Pensioners and Family Pensioners only.  Click the Link and view...