Monday, 4 November 2019

சைதாப்பேட்டை கிளையின் கூட்டம் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை கிளைத்தலைவர் தோழர் சந்திரபாபு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளைசெயலர் தோழர் வீரபத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் ஜி.நடராஜன் , மாநில செயலர் தோழர் எஸ்.தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . ஸிஜிஹெஸ்ஸ் க்கு மாறுவது குறித்து விரிவாக பேசப்பட்டது. உறுப்பினர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு உரிய பதில்கள் கொடுக்கப்பட்டன.மாநில மாநாடு பற்றி மாநில செயலர் பேசினார்.
கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ஜி. நடராஜன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தோழர் ஜி.என் கௌரவிக்கப்பட்டார்.
பிரதம அமைச்சர் தேசிய நல நிதியாக ரூபாய் 5,000/- அளிக்கப்பட்டது. மேலும் சென்னை மாநில மாநாட்டு நிதியாக ரூபாய் 5,000/- வசுலித்து வழங்கப்பட்டது.
மிக சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தின் இறுதியில் தோழர் பூமால் நன்றியுரை வழங்க இனிதே முடிவுற்றது.

No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.