Saturday 8 December 2018

அண்ணாநகர் கிளைக்கூட்டம் இன்று (08-12-18) காலை 10-00 மணிக்கு அண்ணாநகர் தொலைபேசி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .கிளைத்தலைவர் தோழர் S .செல்லையா அவர்கள் தலைமை ஏற்க , கிளை செயலர் தோழர் சம்பத்குமார் அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார். 
மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமார் அவர்களுக்கும், கஜா புயலில் தங்கள் இன்னுயிரை ஈந்த    நூற்றுக்கணக்கான  மக்களுக்கும்  ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில நிர்வாகிகளான அக்ஷய்குமார் , ஜீவானந்தம் , மாநில பொருளாளர் கண்ணப்பன் மற்றும் அகில இந்திய சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் G .நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்
கஜா புயலின் கோர தாண்டவம் பற்றியும் , நம் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட நிவாரணம் பற்றியும் விரிவாக தோழர் கண்ணப்பன் பேசினார். நிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் பெறப்பட்ட நிவாரண நிதி ரூ.15,000/- யை செயலர் சம்பத்குமார் , மாநில பொருளாளரிடம் முதல் தவணையாக வழங்கினார். 
தோழர் நடராஜன் அவர்கள் MRS மூலம் reimburse பெறுவது இனி இயலாத காரியம் போல் உள்ளது.எனவே  CGHS  மருத்துவம் குறித்து யோசிக்க வலியுறுத்தினார் . பென்ஷன் ரிவிசன் மற்றும் பணியாளர்கள் சம்பள ரிவிசன் ஆகியவைகளை டி -லிங்க் செய்துள்ளது நமக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த சமயத்தில் நிறைய உறுப்பினர்களை நம் சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வரும் 17 டிசம்பர் அன்று குறளகம் அருகில் உள்ள தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ள ஓய்வூதியர் தினத்திற்கு பெருவாரியாக நம் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.
தோழர் செல்லையா நன்றி உரை நவில கூட்டம் முடிவிற்கு வந்தது.
இக்கூட்டத்தில் சுமார் 80 ஓய்வூதியர்கள் ( 12 மகளிர் உட்பட ) கலந்து கொண்டனர். இம்மாதம் 12 புதிய உறுப்பினர்கள் வாழ்நாள் மெம்பர்களாக இணைந்துள்ளதாக  சபையோரின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார். 








4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. he leaders' speech are very significant and it describes exactly our condition.Far away near the Xge,we caught a glimpse of all leaders..Now,we confident that we guard ourself..only from Union,where we abides..!Kudos to Com Mohan for superb shots.Salutes to Com Sampathkumar for taking vast steps noiselessly.!..Sridharan E

    ReplyDelete
  3. For kind info,plz:Pensioners Life Certificate".... now online. Now the senior citizens do not need to go to bank for submission of Jeevan Praman ( Life Certificate or हयातीचा दाखला) to bank every year in Nov/Dec.Just login to website:https://jeevanpramaan.gov.in
    Click generate live certificate. Give your adhar number. It sends OTP to your mobile. Feed it n will get your live certificate within seconds.Good initiative by the central government. Please spread to the pensioners in your family and friends...Biometric price is about Two Thousand.It should be linked to BSNL DKYC system where finger print is not required..Sridharan E

    ReplyDelete
  4. Most of us live Our Whole
    life On Default Settings,
    Never Realising that
    we can Actually Customise it
    to Be Unique...E Sridharan

    ReplyDelete

  A list of pensioners names whose Life Certificate Validity expires on 30-04-2024 is posted below. A LINK is given by clicking the link the...