Sunday, 9 December 2018

வில்லிவாக்கம் கிளையின் டிசம்பர் மாத கூட்டம்  கனக துர்கா உயர் நிலை பள்ளியில் வெகு சிறப்பாக 08-12-2018 சனிக்கிழமை மாலை 4-00 மணி அளவில் நடை பெற்றது..கிளை துணைத்தலைவர் தோழர் V .சங்கர் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். தோழர் வைத்தியநாதன் வரவேற்பு உரை நிகழ்த்தினார் மாண்புமிகு ஆனந்தகுமார் அவர்களின் மறைவுக்கும் மற்றும் கஜா புயலில் சிக்கி மரணமடைந்த 
நூற்றுக்கணக்டி கான மக்களுக்காகவும்  ஒரு நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது. கிளையை சேர்ந்த தோழர் T .ராஜகோபால் மிக உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்தனார்.
பிறகு மாநில செயலர் தோழர் தங்கராஜ் அவர்கள் மிகவும் கச்சிதமாக ஓர் உரை நிகழ்த்தினார். பென்ஷன் டி -லிங்க் ஆகியுள்ளது நமக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி. இனி மேல் ஏழாவது சம்பளகுழுவின் பரிந்துரையின் பிரகாரம் நம் பென்ஷன் IDA சம்பள விகிதத்தில் 01-01-2017 லிருந்து மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். நம் வலுவான குரல் கோட்டையில்  கேட்க வேண்டுமானால் உறுப்பினர் எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும் Each One Catch Two என்ற பூரி மாநாட்டு கோரிக்கையின் படி புதிய உறுப்பினர்களை அழைத்து வரவேண்டும் என்றார் . 
பிறகு பேசிய மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக ளான பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் , முத்துப்பேட்டை , வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நம் தொலைபேசி நிலையங்களில் நிவாரண பொருட்களை வைத்து மிகவும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து சுமார் 21 நிவாரண பொருட்களை வழங்கியதை எல்லார் உள்ளம் உருக கூறினார். இதுவரை இந்த மாதிரியான நிவாரண பொருட்களை யாருமே கொடுக்காத நிலையில் அரிசி, துணி, பருப்பு , மெழுகு வத்தி  வகையறாக்கள் , பாய் உட்பட சுமார் 21 சாமான்கள் வழங்கியது அந்தப்பகுதி மக்களை மிகவும் நெகிழச்செய்து செய்து விட்டது. பலனடைந்தோர் பலர் வாழ்த்தி சென்றது நெஞ்சை நெஞ்சை நெகிழச்செய்து , கண்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது என்று உணர்ச்சி மிகு உரை நிகழ்த்தினார்.
கிளைசெயலர் புயல் நிவாரண நிதியாக வில்லிவாக்கம் கிளை சார்பாக ரூ 50,000/- கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். கிளை பொருளாளர் தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் அவர்கள் சுறுசுறுப்பாக நிவாரண நன்கொடை பெறுவதிலேயே ஈடுபட்டிருந்தார். அநேகமாக நிவாரண தொகை  ரூ 50,000/- ஐ தாண்டும் என நம்பலாம்.
வெப் மாஸ்டர் தோழர் N.மோகன் மற்றும் 5 புதிய உறுப்பினர்களை இந்த மாதம் சேர்த்துள்ள தோழர் கிருஷ்ணன் ஆகியோர் கைத்தறி துண்டு போர்த்தி பாராட்டப்பட்டனர் 
கிளை உதவி செயலர் தோழர் பாபு நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.




















No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...