Tuesday, 31 March 2026

 

தோழர்!தோழியர்களே!!
நமது மாநில சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் 21.03.2026 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பழவந்தாங்கல் டிராபிக் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது 22 தோழர்கள் கலந்துக்கொண்டனர்.மேற்கண்டகூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டவை.
1. மாநில சங்கத்திற்கு ஆடிட்டராக தோழர் V சுந்தர் அவர்கள் மாநில சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஆடிட் செய்வதற்கு ஆடிட்டராக நியமித்து ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2. சென்னை தொலைபேசி ஊழியர் Co-operative society லிருந்து உறுப்பினர்களின் நிலுவைத் தொகை தொடர்பாக ஏற்கனவே அமைக்கப்பட்டுந்த எழுவர் குழு சிறு மாற்றத்துடன் தோழர் R.பாண்டின் அவர்கள்  convener ராக கொண்டு
1. R.குணசேகரன்
2. V. சுந்தர்
3. S. தங்கராஜ்
4. M கண்ணப்பன்
5. P. சுப்பிரமணியன்
6. J. ராஜேந்திரன்
ஆகியோரை கொண்டு புணர் அமைக்கப்பட்டது
3. மத்திய கூட்டுறவு சங்கத்தின் சட்டம், BYELAW பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஆராய்ந்து மேல் நடவடிக்கைக்கு உதவும் வகையில் ஏதாவது தகவல் கண்டறியப்பட்டால் அதனை ஒரு அறிக்கையாக மாநில சங்கத்திற்கு வழங்க மேற்கண்ட குழுவைக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
4. இது வரையில் நாம் மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து தொடர் நடவடிக்கையை பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
5. இதற்கிடையில் நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் 
V .வரபிரசாத்ராவ் அவர்களின் தலைமையில் சென்ற மத்திய சங்க குழு Central Register (மத்திய கூட்டுறவு சங்க பதிவாளர்) புதுடெல்லி அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளையும் இந்த குழு ஆராய்ந்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
6. FCPA தலைமை குழு கொடுத்த அறைகூவல்களை நமது சங்க பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளோம்.இனி வரும் காலங்களில் தலைமை கொடுக்கின்ற அறைகூவலை வெற்றி பெற செய்வேம்.
இவை தவிர, பெரம்பூர் CGHS டிஸ்பென்சரி மாதவரத்துக்கு வருவது, புதிதாக குரோம்பேட்டை டிஸ்பென்சரி அமைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், மியாட் மருத்துவமனை சேர்ப்பு, பில்ரோத் ஹாஸ்பிடல் மற்றும் பார்வதி ஹாஸ்பிடல் நீக்கம், பிரைட், ஹோப் மருத்துவமனைகள் பட்டியலில் வரும் வாய்ப்பு, குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனையை empanelல் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தோழர் M.கண்ணப்பண் & தோழர் R.குணசேகரன் தெரிவித்தனர்.
தோழமை வாழ்த்துளுடன்,

தலைவர், செயலாளர், பொருளாளர்


No comments:

Post a Comment

  Pension revision case in Delhi High Court was listed for hearing on  30-03-2026, and as DoT/Union of India sought adjournment in advance c...