Wednesday, 20 April 2022

 

தோழர்களே!

18.04.2022 அன்று குமணன் சாவடி தொலைபேசி நிலையத்தில் அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் 15-வது புதிய கிளையாக பூந்தமல்லி கிளை தொடங்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக தோழர் T.s.விட்டோபன் ..பொருளாளர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சங்கக் கொடியை தோழர். G.நடராஜன் ..து.தலைவர் அவர்கள் ஏற்றி  வைத்தார். தோழர் S.சாம்பசிவம் அவர்கள் தலைமையில் தோழர். R.சம்பத் அனைவரையும் வரவேற்றார். தோழியர் V.ரத்னா ...செயலாளர் துவக்க உரை ஆற்றினார். தோழர்  D .டோமினிக்  வாழ்த்து கோஷங்களை முழங்க தோழர். S.சாம்பசிவம் தலைமையில் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக தோழர் P.நாராயணசாமி அவர்களும் கிளையின் செயலாளராக தோழர்.R.சம்பத் அவர்களும் கிளையின் பொருளாளராக M.C. பாபு அவர்களும் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டார்கள்.

கிளையின் துவக்க விழாவில் தோழர். S.தங்கராஜ். மா.செ தோழர். T.ஜீவானந்தம். மா..செ.தோழர் D.டோமினிக் மா..செ.தோழியர் குணசுந்தரி ரெங்கநாதன் மா..செ.தோழர். A.கோவிந்தராஜலு மா..செ. தோழர் V.N.சம்பத் குமார் கி.செ.அண்ணாநகர். தோழர் ராஜேந்திரன் அம்பத்தூர் ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.தோழர். G .நடராஜன் அவர்கள் கிளை துவங்குவதின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினார்.தோழர் T.S.விட்டோபன் அவர்கள் பென்சன் மாற்றம் சம்பந்தமாக விளக்க உரையாற்றினார். தோழர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் கிளை துவங்க பேருதவி புரிந்தார். தோழர் R.சம்பத் நன்றி கூறி ஒருசில பிரச்சனைகளை மாநில சங்கத்தின் கவனத்திற்கு வைத்துள்ளார். பூந்தமல்லி புதிய கிளை துவக்க விழாவிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் R.சம்பத். கி.செயலர் அவருக்கும் உதவி செய்த அனைத்து உறுபினர்களையும் மாநில சங்கத்தின் சார்பாக மனதார பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.

தோழமை வாழ்த்துகளுடன்
S.தங்கராஜ்.    
மாநில செயலர்
19.04.2022.

Thursday, 14 April 2022

 
மனம் நிறைந்த விரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம்.
தோழர்களே! 11.04.2022 அன்று காலை 10.30 மணிக்கு  விரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தோழர் M.முனுசாமி அவர்கள் தலைமையில் ஜீவனஜோதி ஹால் எழும்பூரில் நடைபெற்றது. மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ் அனைவரையும் வரவேற்று 27.04.2022 அன்று நடைபெற உள்ள 6-வது மாநில மாநாட்டிற்கான ஜனவரி 2018 முதல் மார்ச் 2022 வரையிலான மாநில சங்க செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் M.கண்ணப்பன் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட 01.04.2017 முதல் 31.03.2022 வரையிலான வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு ஒருசில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சார்பாளர் கட்டணம். ரூபாய் 200/.கிளை வாரியாக சார்பாளர்கள்.
1.அம்பத்தூர் 25.
2.அண்ணாநகர். 42.
3.குரோம்பேட்  70.
4.கல்மண்டபம் 27.
5.மைலாப்பூர் 33.
6.கோடம்பாக்கம் 63.
7.சைதாப்பேட்டை 22.
8.திருநின்றவூர் 31.
9.வேளச்சேரி 30.
10.காஞ்சிபுரம் 16.
11.திருத்தனி 11.
12.செங்கல்பட்டு 37.
13.வில்லிவாக்கம் 80.
14.மாதவரம் 34.
மாநாட்டை துவக்க தோழர் D.கோபாலகிருஷ்ணன். ..து.தலைவர் அவர்கள்.சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள் G.நடராஜன்,  A.சுகுமாரன். ..து.தலைவர்கள் தோழர் K.முத்தியாலு ..து.பொ.செயலர் தோழியர் V.ரத்னா. ... பொ .செயலர்.  தோழர் T.S.விட்டோபன் ..பொருளாளர்,  தோழர் V.ராமாராவ் ...பொருளாளர்.  தோழர் R.வெங்கடாசலம் மாநில செயலாளர் தமிழ் நாடு,  தோழர் V.சுந்தர் ..பொருளாளர் A.I.F.P.A. திரு.Dr.V.K.சஞ்சீவ் C.G.M.சென்னை தொலைபேசி மற்றும் திரு.இளமாறன் ஸ்ரீபாலாஜி ஹால் உரிமையாளர் திரு.காமராஜ் அவர்கள் துணை மேயர் தாம்பரம் மாநகராட்சி ஆகியோர்.
செயர்குழு கூட்டத்தில் தோழர் G.நடராஜன் ..து.தலைவர் தோழியர் V.ரத்னா ...செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.மாநில உதவி செயலாளர் தோழர். M.அரங்கநாதன் நன்றி கூறி செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார்
S.தங்கராஜ். மா.செ.
12.04.2022

 






  சென்னையில் 03 -04 -2025 அன்று மாலை 3 -30 மணி அளவில் மத்திய அரசை கண்டித்து ஒரு தர்ணா போராட்டம் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி ச...