Wednesday, 20 April 2022

 

தோழர்களே!

18.04.2022 அன்று குமணன் சாவடி தொலைபேசி நிலையத்தில் அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் 15-வது புதிய கிளையாக பூந்தமல்லி கிளை தொடங்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக தோழர் T.s.விட்டோபன் ..பொருளாளர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சங்கக் கொடியை தோழர். G.நடராஜன் ..து.தலைவர் அவர்கள் ஏற்றி  வைத்தார். தோழர் S.சாம்பசிவம் அவர்கள் தலைமையில் தோழர். R.சம்பத் அனைவரையும் வரவேற்றார். தோழியர் V.ரத்னா ...செயலாளர் துவக்க உரை ஆற்றினார். தோழர்  D .டோமினிக்  வாழ்த்து கோஷங்களை முழங்க தோழர். S.சாம்பசிவம் தலைமையில் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக தோழர் P.நாராயணசாமி அவர்களும் கிளையின் செயலாளராக தோழர்.R.சம்பத் அவர்களும் கிளையின் பொருளாளராக M.C. பாபு அவர்களும் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டார்கள்.

கிளையின் துவக்க விழாவில் தோழர். S.தங்கராஜ். மா.செ தோழர். T.ஜீவானந்தம். மா..செ.தோழர் D.டோமினிக் மா..செ.தோழியர் குணசுந்தரி ரெங்கநாதன் மா..செ.தோழர். A.கோவிந்தராஜலு மா..செ. தோழர் V.N.சம்பத் குமார் கி.செ.அண்ணாநகர். தோழர் ராஜேந்திரன் அம்பத்தூர் ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.தோழர். G .நடராஜன் அவர்கள் கிளை துவங்குவதின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினார்.தோழர் T.S.விட்டோபன் அவர்கள் பென்சன் மாற்றம் சம்பந்தமாக விளக்க உரையாற்றினார். தோழர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் கிளை துவங்க பேருதவி புரிந்தார். தோழர் R.சம்பத் நன்றி கூறி ஒருசில பிரச்சனைகளை மாநில சங்கத்தின் கவனத்திற்கு வைத்துள்ளார். பூந்தமல்லி புதிய கிளை துவக்க விழாவிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் R.சம்பத். கி.செயலர் அவருக்கும் உதவி செய்த அனைத்து உறுபினர்களையும் மாநில சங்கத்தின் சார்பாக மனதார பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.

தோழமை வாழ்த்துகளுடன்
S.தங்கராஜ்.    
மாநில செயலர்
19.04.2022.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...