Monday, 14 March 2022

 


வில்லிவாக்கம் கிளையின் மார்ச் மார்ச் மாதக் கூட்டம் 12-03-2022 அன்று மாலை கிளை தலைவர் தோழர் P . .கங்காதரன் தலைமையில் கருத்தைக் கவரும் ஒரு திருக்குறள் பொழிப்புரையுடன் துவங்கியது.செயலாளர் தோழர் A .S . வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். இன்றைய கூட்டத்தில் மகளிர் தின விழாவும் கொண்டாடப்பட்டது. 11 மகளிர் வந்திருந்தார்கள் அவர்களுக்கு கைத்தறி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உதவி பொதுச் செயலர் தோழியர் V. ரத்னா அவர்களும், தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் , கிளை பொருளாளர் ஆகியோர் மகளிர் தின சிறப்புகளை எடுத்து உரைத்தார்கள் .

சென்னை மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் எல்லா செய்திகளையும் உள்ளடக்கி ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார். சென்னை மாநில ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றார் . வில்லிவாக்கம் கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்  ஏப்ரல் மாதத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நடத்தப்படும் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும்.  

சுமார் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .அனைவருக்கும் இனிப்பு , காரம் , தேநீர் வழங்கப்பட்டது. கூட்டத்தின் இறுதி கட்டமாக தோழர் ஜெயக்குமார் , துணைத்தலைவர் நன்றி உரை நிகழ்த்தி முடித்து வைத்தார்

No comments:

Post a Comment