Sunday, 13 March 2022

 

தோழர்களே ,
அண்ணாநகர் கிளை யின் மார்ச் மாதக்கூட்டம் 12-03-2022 அன்று காலை 0930 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் S .செல்லையா அவர்களின் தலைமையில் நடைபெற்றது  தலைவரின் தலைமை உரைக்குப்பின், சமீபத்தில் காலமான
 உறுப்பினர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளை செயலர் தோழர் சம்பத்குமார் தனது வரவேற்புரையில் ஓய்வூதிய ரிவிஷன் , CGHS மற்றும் நிலுவையில் இருக்கும் விஷயங்கள் குறித்து பேசினார். தோழர்கள் ராஜேந்திரன், சோமசுந்தரம் மற்றும் அசோக்குமார்  ( வில்லிவாக்கம் கிளை ) ஆகியோர் பேசினார்கள் . கிளை மாநாடு வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது
 கூட்டத்தில் புதிதாக சேர்ந்துள்ள 7 உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு , கைத்தறி துண்டு அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர். புதிய உறுப்பினர்கள் பெயர்கள் : தோழர்கள் சுப்ரமணியன் , கருணாகரன், செபஸ்டியன் , மனோகரன் ,  ஏழுமலை விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி.
மகளிர் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழியர் N K . வேதவல்லி பெண்களின் சிறப்புக்கள் , அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.
மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் எல்லா விஷயங்கள் குறித்து பேசினார். தமது பேச்சிற்கிடையி ல்  மாநில மாநாடு வரும் ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் நடைபெறும் என்றார்.
தோழர் அக்ஷய்குமார் நன்றி உரைக்குப்பின் கூட்டம் முடிவடைந்தது.



1 comment:

  சென்னை தொலைபேசி மாநிலத்தை சார்ந்த மயிலாப்பூர் கிளையின்  7 வது ஆண்டு விழா  RK நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழ...