வில்லிவாக்கம் கிளை பிப்ரவரி மாத கூட்டம் 12-02-2022 அன்று மாலை 4-00 மணி அளவில் நடைபெற்றது .கிளைத்தலைவர் தோழர் கங்காதரன் தலைமை ஏற்று திருக்குறள் உரையுடன் துவக்கி வைத்தார்.சமீப காலத்தில் மறைந்த நம் தோழர்கள் , இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் மற்றும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில செயலர் தோழர் தங்கராஜ் மற்றும் மாநில பொருளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் வைத்தியநாதன் கிளை செயலர் துவக்க உரையுடன் ஆக்க பணிகளை எடுத்துரைத்தார். மார்ச் மாதம் 12ஆம் தேதி கிளை மாநாடு நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார் இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றார்.
கிளை உறுப்பினர்கள் தோழர் மோகன் ,தோழர் தேவேந்திரன் , தோழியர் கெளரி ஆகியோர் பாராட்டி பேசினார்கள்
மாநில செயலர் தமதுரையில் சென்னை மாநில சங்க சார்பில் தலைமைப் பொதுமேலாளரை சந்தித்து மருத்துவ பில்கள் பணப் பட்டுவாடா செய்ய வேண்டுகோள் வைத்தோம், அவரும் .ஆவண செய்வதாக உறுதி அளித்து 2019 மார்ச் லிருந்து 6 மாத காலத்திற்கான பணப் பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். நம் தோழர்கள் CGHS க்கு மாற வேண்டும். அதற்கான முன்பணத்தை BSNL நிர்வாகம் நேரடியாக CGHS க்கு அனுப்புவதாக நம் மத்திய தலைவர்களிடம் கூறியுள்ளது இந்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். சென்னை மாநில த்தில் உள்ள அனைத்து கிளைகளும் மார்ச் மாத இறுதிக்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடித்து விட வேண்டும் , மாநில மாநாடு 2022 ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது என்றார் . சென்னை மாநிலத்தின் 14வது கிளை, வில்லிவாக்கம் கிளையிலிருந்து பிரிக்கப்பட்டு மாதவரம் கிளை செயல்படும். இம்மாத இறுதியில் மாதவரம் கிளை அமைப்பு மாநாடு நடைபெறும் என்றார் .
மாநில பொருளாளர் தமதுரையில் வில்லிவாக்கம் கிளையின் செயல்பாடுகளை பாராட்டி , அதிக உறுப்பினர்களை சிறப்பித்த கிளை செயலரை வெகுவாக பாராட்டினார். பென்ஷன் அனாமலி கேஸ் ஒன்றை பதிவு செய்து சிறப்பாக வாதாடி வெற்றி பெற்று நான்காயிரத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஒய்வு பெற்று 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை பெற்று தந்தது நம் சங்கம் மட்டுமே..பணப்பயன் பெற்றுள்ள பயனாளிகள் சிலர் நன்கொடை வழங்கி உள்ளனர். இன்னும் பலர் வழங்க வில்லை அவர்கள் தொடர்பு நம்மிடம் இல்லை . சென்னை மாநிலம் 5062 உறுப்பினர்களை கொண்டுள்ளது. கொரோனா தொற்று கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் VRS ல் வந்துள்ள தோழர்கள் அனைவரையும் நம் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு நம் சங்கத்தில் இணைய வைக்க வேண்டும் என்றார்.
VRS ல் ஒய்வு பெற்று நம்மிடம் சேர்ந்துள்ள தோழர் தேவராஜன் துண்டு அணிவித்து கவுரவிக்கப்பட்டார் .
60 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இன்றைய கூட்ட முடிவில், தோழர் அசோக்குமார் நன்றி நவில கூட்டம் இனிதே முடிவுற்றது.