Friday, 19 June 2020

தோழர் மூர்த்தி அவர்களின் மாப்பிள்ளை மறைவு.

தோழர்களே ,
சென்னை மாநில சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் M. மூர்த்தி அவர்களின் மூத்த மாப்பிள்ளை திரு N .அப்பு அவர்கள் நேற்று காலமாகிவிட்டார் . இப்போது கொரோனா எனும் கொடிய நச்சுக் கிருமிகள் சென்னை பகுதிகளில் அதிகமாக பரவியிருக்கும் நிலையில் , மறைந்த அவர் உடலை எரியூட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அனுமதி சான்றிதழ் தேவைப்பட்டது. சென்னை இராயப்பேட்டை பொதுநல மருத்துவ மனை அவரது உடலை சோதித்து அவரது மறைவு இயற்கையான மறைவுதான் . கொரோனா பாதித்து அல்ல என்று சான்று அளித்துள்ளனர். எனவே அவர் குடும்பத்தினர் யாரும் தனிமைப் படுத்தப்பட வேண்டாம், இது  சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி எனினும் அன்னாரின் உயிர்  இழப்பு , பேரிழப்புதான். 
அன்னாரின் இறுதி பயணம் இன்று (19-06-2020) மதியம் துவங்கும்.
தோழர் மூர்த்தியின் மகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
சென்னை மாநில சங்கம்

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...