Tuesday, 16 June 2020


அன்புத் தோழர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
தோழர்களே. எதிர்பாராத விதமாக அகில உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொராணா என்ற கொடிய வைரஸ் நமது செயல்பாடுகள் அனைத்தையும் முடக்கி உள்ளதை அனைவரும் அறிவீர்கள். இந்த வைரஸ் மூலமாக பாதிக்கப்பட்டோர், உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிரித்து கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு  போன்ற மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லை. அனைத்து ஓய்வூதியர்களும் தங்களது குடும்பத்தாருடன் கவனமாகவும் நலமாகவுகம் இருக்க அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
கொராணா நிவாராணநிதி.
நமது மாநில சங்க ஓய்வூதியர்களின் சார்பாக 13.06.2020  வரை
 ₹ 343160/ நிவாரண நிதி  வழங்கிஉள்ளோம்  என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதுவரை நிவாரணம் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.  நிவாரண நிதி வழங்க 26.06.2020 கடைசி நாள் ஆகும். ஆகவே நிவாரணம் வழங்காத. நல்ல உள்ளங்கள், கிளை  செயலாளர்கள், முன்னனி ஓய்வூதியர்கள்,
26.06.2020 க்குள். வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
MRS  Option சம்பந்தமாக.
MRS Option சமர்ப்பிக்க 30.06.2020 கடைசி நாள் என்று நிர்வாக உத்தரவு உள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் எந்தவிதமான போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலை,  நிர்வாகத்திற்கும் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் கவனத்திற்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம்.உடனடியாக நமது பொதுச்செயலர் நிர்வாகத்திற்கு 15.06.2020.அன்று கடிதம் எழுதி உள்ளார். இருப்பினும்     Option  கொடுக்க விரும்பும் ஓய்வூதியர்கள் மற்றும் VRS ஓய்வூதியர்கள் நிர்வாகம் அறிவித்துள்ளது போன்று தபால் மூலமாகவோ அல்லது  e-mail மூலமாகவோ  Option   அந்தந்த AO க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தபால் மூலம் அனுப்ப..,
1.A O  PAY AND ACCOUNTS,    COBA,
All Head Quarters Area,
Flower bazaar Annex Bldg,
N SC Bose Road ,
Chennai. 60 00 01

2. A O  PAY AND ACCOUNTS
NORTH AREA
Flower Bazaar Telephone Exchange
1st Floor.
NSC BOSE ROAD.
Chennai 60 00 01.

3. AO  PAY AND ACCOUNTS,  
WEST  AREA
KODAMBAKKAM TELEPHONE EXCHANGE,
Ganga Nagar,
KODAMBAKKAM,
Chennai 60 0024

4.AO PAY AND ACCOUNTS,  
ALL CENTRAL AREAS
ANNA ROAD TELEPHONE EXCHANGE,
10 Dams Road,
Chennai 60 00 02

5.AO PAY AND ACCOUNTS
ALL SOUTH AREAS
BSNL ,  40 E  CIPET  ROAD
TVK Industrial Estate,
Guindy.
CHENNAI 60 00 32

-மெயில் மூலமாக அனுப்ப,   முகவரி
bsnlmrsretired@gmail.com
நன்றி.
தோழமை வாழ்த்துக்களுடன்
S.தங்கராஜ்.
மாநில செயலர்.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...