Monday, 24 February 2020


22.02.2020 அன்று நடந்த AIBNSLPWA செங்கல்பட்டு கிளையின் பொதுக்குழு கூட்டம் கிளையின் தலைவர் தோழர் மு.அரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.கிளையின் நிரந்தர உறுப்பினர் தோழர் S.கலைமணி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கிளைச்செயலர் சொ.ஒளி வரவேற்புரை வழங்கினார். 196  நபர்கள் கலந்து கொண்டனர். 131 நபர்கள் புதியவர்கள். நிரந்தர உறுப்பினர்களாக 53 பேர் பதிவு செய்தனர்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் தோழர் முனுசாமி , மாநில செயலாளர் தோழர் தங்கராஜ் , மாநில உதவி செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி , மாநில உதவி தலைவர் சுப்பிரமணி, குரோம்பேட்டை கிளை செயலாளர் தோழர் மாரிமுத்து , காஞ்சிபுரம் கிளைச் செயலாளர் தோழர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கலந்து கொண்ட புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உறுப்பினர் சேர்க்கைக்கு உதவிய தோழர்கள் R.நாராயணசாமி, U.சேகர், மகாதேவன், C.பூபால்,  M.K. தனசேகர்,  V.டெல்லி, E.ராதாகிருஷ்ணன் V.நாகப்பன் , K. குப்பன் , E. குணசேகரன், M.பாலகிருஷ்ணன் ஆகிய அனைவருக்கும் நன்றி கூறி  கிளைச் செயலாளர் சொ.ஒளி அவர்களின் நன்றியுரயுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...