Monday, 5 August 2019

சைதாப்பேட்டை கிளையின் கூட்டம் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4-30 மணியளவில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளைத்தலைவர் தோழர் சந்திரபாபு தலைமையேற்க , செயலர் தோழர் வீரபத்திரன் வழிநடத்தினார் .
 அகில இந்திய உதவி பொதுச்செயலர் தோழியர் ரத்னா ,  மாநில செயலர் தோழர் தங்கராஜ் , அண்ணாநகர் கிளை செயலர் தோழர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தின் முத்தாய்ப்பாக நம் சங்கத்தின் முன்னோடி தோழர் குமரேசன் அவர்கள் நம் மாநில செயலர் தோழர் தங்கராஜ் அவர்களால் பாராட்டப்பட்டு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். திறனான உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் மாலை 6-30 மணியளவில் நன்றி உரைக்குப்பின் இனிதே முடிவடைந்தது.

No comments:

Post a Comment

  November, 2025 - Largest-ever DLC Campaign covering 2000 Districts and Sub-Divisions across the Country   The Department of Pension ...