சென்னை தொலைபேசி மாநிலம் ஓய்வூதியர் தினத்தை 17-12-2018 அன்று பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடத்தி மகிழ்ந்தது. சென்னை மாநில AIBSNLPWA தலைவர் தோழர் முனுசாமி அவர்கள் தலைமை தாங்க , சென்னை மாநில செயலர் தோழர் தங்கராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசி அமர்ந்தார். மத்திய சங்க தலைவர்கள் தோழர் நடராஜன் , தோழர் சுகுமாரன் , தோழர் விட்டோபன் , தோழியர் ரத்னா ஆகியோர் மிக சிறப்பாக பேசினார்கள். 17-12-1982 அன்று திரு நகாரா அவர்கள் தொடுத்த வழக்கில் உச்ச நிதி மன்றம் அளித்த தீர்ப்பின் படி ஓய்வூதியம் என்பது கருணைத்தொகை அல்ல . தன் பணிநாள் முழுவதும் அரசுக்காக , நிறுவன மேம்பாட்டுக்காக உழைத்து களைத்த உழைப்பாளர்கள் தம் எஞ்சிய நாட்களை கண்ணியமாக காலந்தள்ள ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும். ஓய்வூதிய மாற்றத்தில் கால வரையறை கூடாது என்று தீர்ப்பளித்து ஓய்வூதியர் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றியது. முதல் சம்பள குழு முதல் நான்காவது சம்பளக்குழு வரையில் ஓய்வூதியர் ஓய்வூதிய மாற்றம் குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. ஐந்தாவது சம்பள குழுபரிந்துரையில் ஓய்வூதியருக்கு 50 சத பஞ்சப்படி கொடுக்க பரிந்துரைத்தது. ஆறாவது சம்பளக்குழு முழு நிவாரணம் அளிக்கப்பட வேண்டுமென்றது. நமக்கு மத்திய அரசுதான் பென்ஷன் விதி 1972 படி அரசு ஊழியருக்கு இணையான ஓய்வூதியம் அளித்து வருகிறது. நாம் BSNL லில் இருந்து ஒய்வு பெற்றாலும் மத்திய அரசின் ஓய்வூதியர்கள் எனவே ஏழாவது சம்பளக்குழுவின் ஓய்வூதியர் பரிந்துரைகளை நமக்கும் IDA சம்பள முறையில் அமலாக்க வேண்டும் அதற்கான முயற்சிகளில் நம் சங்கம் போராடி வருகிறது. நம் சங்கத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டும் , உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று மேடையில் பேசிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். பார்வையாளர்கள் எண்ணிக்கை 500 ஐத்தாண்டி நின்றது பாராட்டுதலுக்குரியது.
மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் நன்றி நவில விழா நிறைவு பெற்றது.
மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் நன்றி நவில விழா நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment