Monday, 14 March 2022

 


அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 12-03-2022 மாலை 4.00 மணியளவில் கிளை தலைவர் தோழர் A இஸ்மாயில் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைவர் தொடக்க உரையுடன்  கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை எய்திய தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது கிளை செயலர் B.தியாகராஜன் கிளை மாநாடு நடத்துவது குறித்து பேசினார். கூட்டத்தில் அதற்கான திட்டங்கள் குறித்து  விவாதித்து ஏப்ரல் 13ல்  மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில செயலர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் மாநில மாநாடு சம்பந்தமாகவும், நீதிமன்ற வழக்குகள் ஓய்வூதிய பிரச்சனை பற்றியும் பேசினார்.கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் G.அரி, K.பாண்டியன் ஆகியோர் பேசினர்.
தோழர் K N மோகன் நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
 
B.தியாகராஜன்
கிளை செயலர் அம்பத்தூர்

No comments:

Post a Comment

  மனிதச்சங்கிலி இயக்கம் 25.7.2025 அன்று சென்னையில் !  மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி கேட்கும் பொறுப்பை AIPRPA மாநில உதவிச் ...