Thursday, 19 November 2020

 பத்திரிகை செய்தி
 
இன்று (19/11/20) மத்திய பொதுத்துறை இலாகா, மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், பி எஸ் என் எல் ஓய்வூதியர் களுக்கும் அக்டோபர் முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியை முடக்கி உத்தரவிட்டுள்ளது. அதே போல் ஜனவரி, ஏப்ரல் 21 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் முடக்கி உத்தரவிட்டுள்ளது. நிலுவைத்தொகை கிடையாது எனவும் அறிவித்துள்ளது.
 
. அத்தியாவசிய பொருட்ளின் விலை கடுமையாக உயரும் இந்த நேரத்தில் பஞ்சபடி முடக்கம்   வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் 2 லட்சம் பி எஸ் என் எல் ஓய்வூதியர் களும் பாதிக்கப்படுகின்றனர்இதன் காரணமாக அவர்களின் வாங்கும் சக்தி குறையும். அது பொருளாதார தேக்க நிலைக்கு இட்டுச் செல்லும்.
 
கொரோனாவை காரணம் காட்டி இந்த முடக்கம் என உத்தரவு குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் கூட பெரு முதலாளிகளுக்கு அரசு சலுகை வழங்கி உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிரோம்.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வற்புறுத்தி கேட்டு கொள்கிறோம்.
 
The above press Statement was issued by AIBSNLPWA TN and Chennai Telephone circles.

No comments:

Post a Comment

  PENSIONERS ID CARDS HAVE BEEN DISPATCHED BY POST . About 400 ID cards of  Pensioners have been sent by post. A list is given below. By cli...