Friday, 9 October 2020

 

தோழர்களே ,
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

சாம்பன் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுகின்ற நம் ஓய்வூதியர்களில், 2019 செப்டம்பர் வரையில் ஒய்வு பெற்றவர்கள் இந்த மாதம் உயிர்வாழ் சான்றிதழ் CCA அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கான மாதிரி படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அரசாங்க பதிவு பெற்ற ஏதாவது ஒரு அதிகாரியிடம் கையொப்பம் பெற்று அல்லது நம் BSNL லில் SDE அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ளவர்களிடம் கையொப்பம் பெற்று , 60 எத்திராஜ் சாலை , முதல் மாடி , எழும்பூர் , சென்னை 60 00 08 அலுவலகத்திற்கு ஸ்பீட் போஸ்ட் ல் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்குவதற்கான ஆயத்த வேலைகள் 20 ஆம் தேதியே துவங்கப்படும். எனவே அக்டொபர் 20 தேதிக்கு முன் கிடைக்கும் படி அனுப்பவும் . பென்ஷன் பெறும் வங்கிக்கு  உயிர் வாழ் சான்றிதழ் அனுப்ப வேண்டாம் .  இது SAMPANN   திட்டத்தில் ஓய்வூதியம் பெருகிறவர்களுக்கான செய்தி.
 
பணி நிறைவு ஒய்வு பெற்றவர்களில் 80 அல்லது அதற்கு மேல் அகவையுள்ள சூப்பர் சீனியர்கள், தங்களது  உயிர்வாழ் சான்றிதழை அக்டொபர் முதல் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 தேதி வரை தங்களது ஓய்வூதியம் பெறுகின்ற  வங்கி அல்லது தபால் ஆபிசில் கொடுக்க வேண்டும்.
 
80 வயதிற்கு கீழ் உள்ள ஓய்வூதியர்கள் அவ்வாறே நவம்பர் முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31 தேதிக்கு முன்பாக ஓய்வூதியம் பெறுகின்ற வங்கி அல்லது தபால் ஆபிசில் கொடுக்க வேண்டும்.
அவசியம் முக கவசம் அணிந்து செல்லவும். வீட்டிலிருந்தே குடிக்கும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லவும். உரிய காலத்தில் உயிர்வாழ் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் ஓய்வூதியம் பெறுவது தடை படும்.
தோழமை வாழ்த்துக்களுடன்.
மாநில செயலர்.




 

 

 

 


No comments:

Post a Comment

  November, 2025 - Largest-ever DLC Campaign covering 2000 Districts and Sub-Divisions across the Country   The Department of Pension ...