Friday 24 April 2020

PRESS RELEASE ON DA FREEZING
PRESS RELEASE :  CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND WORKERS, TAMILNADU.                                                                                                     23/04/2020
          மத்திய நிதி அமைச்சகம் தனது 23/04/2020  தேதியிட்ட உத்தரவில் விலைவாசி உயர்விற்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களுக்கும், மத்தியஅரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படியை (பஞ்சபடி/DA)       July 2021 வரை நிறுத்திவைப்பதாகவும், நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியானது பிறகு வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளது. இந்த உத்திரவு ஏற்கனேவே தங்களின் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் முதல் பெரும் தொகை வரை  பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்த மத்தியஅரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதுகுறைந்தபட்சம் 4% முதல் 6 மாதங்களுக்கும் , 8% அடுத்த ஆறு மாதங்களுக்கும், 12% அடுத்த ஆறு மாதங்களுக்கும் பஞ்சபடியானது வழங்கப்படாது என உத்திராவிடப்பட்டுள்ளது

          முறையாக அரசுக்கு வருமானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் TDS என்ற பெயரில் வருமானவரியை  முன்னதாக செலுத்திவிட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்களின் பஞ்சபடியை மத்தியஅரசு, கிடையாது என்று அறிவித்ததை மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.
          ஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பதையும், நாட்டின் பொருளாதார கொள்கையையும் ஒரேமாதிரி கையாளும்  இந்த மத்தியரசின் தவறான மற்றும் பெரும்பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதாரகொள்கையின் காரணமாக விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியின் கொடுமையால் குறைந்திருக்கும் பணப்புழக்கத்தை இந்த அகவிலைப்படியை கொண்டுதான் மத்தியஅரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சமாளித்துகொண்டியிருக்கும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பானது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது மட்டுமின்றி பணப்புழக்கத்தை குறைக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

          பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராகடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதியை (contingency fund) மற்றும்  அவசரகால நிதிகளை  மக்களுக்காக  பயன்படுத்தாமலும்,  புல்லட்ரெயில், புதிய பாராளமன்ற கட்டிட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்  கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சபடியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லா விலையில் விற்கப்படும் சூழ்நிலையில்   பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காமலிருப்பது, எரிகிற வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் என்பதுபோல் இந்த பேரிடர்காலத்தில் சுங்க கட்டணத்தை உயர்த்தியது என அரசு ஊழியர் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை இந்த அரசானது தொடர்ந்துகொண்டியிருக்கிறது.
         
          இத்தகைய மக்கள் விரோத மற்றும் அரசு ஊழியர் விரோத போக்கை மத்தியரசு உடனடியாக கைவிடவேண்டுமென்றும், பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக்கொண்டிருக்கும் அரசுஊழியர்களின் பஞ்சபடி நிறுத்த உத்திரவை வாபஸ் பெறவேண்டுமென்றும் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம்
M.துரைபாண்டியன் , பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment

  A list of pensioners names whose Life Certificate Validity expires on 30-04-2024 is posted below. A LINK is given by clicking the link the...