Thursday, 30 January 2020


அன்புத் தோழர்களே ,
அனைவருக்கும் எங்கள் தோழமை வணக்கம். 31-01-2020அன்று விருப்ப ஓய்வில் செல்ல இருக்கிறீர்கள் ,உங்கள் அனைவரையும் வாழ்த்தி வழி அனுப்புகிறோம். பணியில் இருந்த பொது நாம் பல சங்கங்களில் உறுப்பினராக இருந்து சங்கத்தின் மேன்மைக்கும், ஊழியரின் உயர்விற்கும் பாடுபட்டிருப்போம். ஒய்வு பெற்றபின் அனைவரும் சங்க வேறுபாடின்றி  , சாதி, மத , இன ,மொழி வேறுபாடில்லாமல் ஓய்வூதியர்களின் நலன் , அவர்களின் உயர்வு ஒன்றையே கருத்தாக கொண்டு ஓயாமல் பாடுபடும் AIBSNLPWA  வில் இணைந்திடுக.இச்சங்கத்தில் ஒய்வு பெற்ற CGM  முதல் RM வரை அனைவரும் சமமே 
AIBSNLPWA  சங்கம்தான் அகில இந்தியாவில் மிக அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஓய்வூதியர் நல சங்கமாகும். 
AIBSNLPWA  சங்கம்தான் 68.8% IDA வில் ஓய்வூதிய மாற்றம் பெற்றுத் தந்தது.78.2% IDA வில் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்ந்தபின் ஓய்வூதியர்களுக்கும் நீண்ட நாட்கள் போராடி, வாதாடி 10-06-2013 லிருந்து நிலுவை த்தொகையுடன் பெற்றுத் தந்தது.
AIBSNLPWA  சங்கம்தான் ஓய்வூதியத்திற்கு தடையாக இருந்த 60:40 சிக்கலை நீக்க பாடுபட்டு பின் வெற்றியும் பெற்றது.
AIBSNLPWA  சங்கம்தான் ஓய்வூதியர்களுக்கும் குவார்ட்டர்ஸ்  வசதியை பெற்றுத்தந்தது.
AIBSNLPWA   சங்கம்தான் ஓய்வூதியர்களுக்கு வவுச்சர் இல்லாமல்  மருத்துவ அளவன்ஸை மீண்டும் வாங்கித் தந்தது.
 AIBSNLPWA சங்கம்தான் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நமக்கும் கிடைத்திட அயராது பாடுபட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் இனி வருங்காலத்தில் மத்திய அரசு எப்போதெல்லாம் ஊதியக்குழு அமைக்கிறதோ அப்போதெல்லாம் நமக்கும் அந்த பரிந்துரைகள் அமல் படுத்தப்படும் .
இது போன்று இன்னும் பலப்பல சலுகைகளை பெற்றுத் தந்தது.
வாருங்கள் தோழர்களே நாம் ஒன்றாக இணைந்து ஓய்வூதியர் நலத்திற்கு பாடுபடுவோம்.
பொன்னான எதிர்காலத்தை உண்டாக்கிட, கண்ணான AIBSNLPWA சங்கத்தில் இணைந்திடுக. 
தோழமை வாழ்த்துக்களுடன்,
AIBSNLPWA ,
மாநில சங்க நிர்வாகிகள் .
சென்னை மாவட்ட மாநிலம் 
சென்னை.








No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...