Saturday, 2 November 2019

தோழர்களே,
நாம் ஓய்வூதியம் பெறுகின்ற  வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் நாம்  உயிர் வாழ்  சான்றிதழை நவம்பர் மாதம் அவசியம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர் மாத ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் . இந்தியன் வங்கி அனுப்பியுள்ள எஸ்.எம் எஸ் பிரகாரம் நம்முடைய ஆதார் மற்றும் பாண் கார்ட் ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் காப்பி  வங்கி  பாஸ் புத்தகம் கொண்டு செல்ல வேண்டும் .உயிர் வாழ் சான்றிதழை கொடுத்துவிட்டு வங்கியாளர் பெற்றுக்கொண்தற்கான ஒப்புகை சீட்டு கேட்டுப் பெறவும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்.

மேலும் நாம் வாடகையில்லா தரை வழி தொலைபேசி சர்விஸ் கனெக்சன் வைத்திருக்கிறோம். அங்கேயும் நாம் உயிர் வாழ்  சான்றிதழை இந்த நவம்பர் மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தொலைபேசிக்கு வாடகை கட்ட வேண்டியிருக்கும்.இலவச அழைப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.
 PPO புத்தகத்தை எடுத்துச் சென்றால் பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவரவும்.


No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.