Thursday 7 November 2019


 06−11−2019 அன்று புதன் மாலை 04.30 மணிக்கு அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் சென்னை தொலைபேசி மாநிலம் திருநின்றவூர் கிளையின் மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக கிளையின் தலைவர் தோழர் வீராசாமி தலைமையில் நடைப்பெற்றது.
 இந்த கூட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட கிளை உறுப்பினர்கள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள்.
 கடந்த 2 மாதங்களில் உயிர்நீத்த உறுப்பினர்களுக்கு அஞ்சலியும் மற்றும்  தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிளை உறுப்பினர்கள் மூவருக்கு விரைவில் குணமடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

முதல்முறையாக இந்த கிளையின் உறுப்பினர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பிறந்தநாள் காண்பவர்களுக்கு கிளையின் சார்பாக இனியபிறந்த நாள் நல்வாழ்த்துகளும் தெரிவிக்கப் பட்டது.
 இனி வரும் கூட்டங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் கொண்டப்படும் என முடிவு செய்யப்பட்டது.
 கிளையின் செயலாளர் தோழர் லோகநாதன் தற்போது கிளையின் அமைப்பு நிலை, உறுப்பினர்கள் எண்ணிக்கை 250 இலக்கை வரும் மார்ச் மாதத்தில் அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்தார்.

 ஓய்வூதியர்களுக்கு BSNL MRSல் இருந்து CGHSக்கு மாறுதலுக்கு வழிமுறைகள், 7வது CPC அடிப்படையில் நமது ஓய்வூதிய மாற்றம்,  இந்த மாதம் நமது ஓயவூதியர்கள் அனைவரும் லைப் சர்டிபிகேட் நமது ஓய்வூதியம் பெற்று வரும் வங்கி/தபால் நிலையத்தில் அளிப்பது, லேண்ட் லைனுக்கு அந்த அந்த கமர்சியல் ஆபிசில் கொடுப்பது,  தவிர வரும் டிசம்பர் 27 மற்றும் 28 நடைபெறும் சென்னை மாநில மாநாடு குரோம்பேட்டை பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் விபரங்கள், சார்பாளர்/பார்வையாளர் கட்டணம் ரூ 300.00 மற்றும் அகில இந்திய அளவில் நமது சங்கத்தின் சார்பாக ரூ 40.00 இலட்சம் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு  வரும் நவம்பர் 9ம் தேதி அளிக்க உள்ள விபரங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
 தற்போது நமது உறுப்பினர்கள் அதிகரிக்க சிறப்பாக செயல்பட்ட தோழர் சுகுமார், தோழர் நாகேந்திரபாபு இருவரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
மாநில அமைப்பு செயலாளர் தோழியர் குணசுந்தரி அவர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
 நன்றியுரை தோழர் சுகுமார்  நவில இன்றைய கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.
  
தோழர் லோகநாதன்
திருநின்றவூர் செயலாளர்

No comments:

Post a Comment

Circle Executive Committee Meeting of ChTD  was conducted on 23-04-2024 in Jivana Jyoti Hall, Egmore in a grand manner. In spite of Chitra P...