Wednesday, 9 October 2019

சென்னை தொலைபேசி மாநில செயற்குழு இன்று எழும்பூர் , பாந்தியன் சாலையில் இருக்கும் ஜீவன ஜோதி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தலைவர் தோழர் முனுசாமி தலைமை ஏற்றார் , மாநில செயலர் தோழர் தங்கராஜ் வழி நடத்தினார். இன்றைய முக்கிய நிகழ்வாக வர இருக்கும் சென்னை மாநில ஆண்டு பொதுக்குழு மாநாடு குறித்ததாக அமைந்தது. மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை சங்க செயலர்கள் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
மாநில செயலர் தமது பரப்புரையில் சென்னை மாநில மாநாடு 2019 டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாலாஜி கல்யாண மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறும் என்கிறார். இந்த கல்யாண மண்டபம் குரோம்பேட்டை இரயில் நிலையம் எதிரில் மிக அருகில் உள்ளது  மாநாட்டை  சிறப்பாக நடத்திட 7 சிறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன . 
செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விவரங்கள் விரைவில் பதிவிடப்படும் .
Thirunindravur Br.Secretary Com. Loganathan gives the first installment for the ensuing Circle Conference .

No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.