Sunday, 22 September 2019

21 -09 -2019  அன்று மாலை கோடம்பாக்கம் கிளைக்கூட்டம் கோடம்பாக்கம் தொலைபேசி நிலைய வளாகத்தில் கிளை தலைவர் தோழர் VR கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. 85 உறுப்பினர்களுக்கு மேல் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G .நடராஜன், சென்னை தொலைப்பேசி மாநில செயலர் தோழர் S .தங்கராஜ் ,மாநில  உதவி செயலர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். BSNL  MRS சிஸ்டத்திலிருந்து CGHS திட்டத்திற்கு மாறுவதற்கான வழிமுறைகள் , CGHS திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகியன குறித்தும், ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை நாம் பெற நம் சங்கம் செலுத்துவரும் முயற்சிகள் குறித்து விரிவாக பேசினார்கள். சுமார் 17 க்கு மேல் புதிய உறுப்பினர்கள் நம்மிடையே சேருவதற்கு உறுதுணையாக இருந்த தோழர் S .கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலர் நன்கு பாராட்டப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். சுமார் 600 உறுப்பினர்கள் உள்ள கோடம்பாக்கம் விரைவில் 1000 உறுப்பினர்களின் எண்ணிக்கையை எட்ட முயல வேண்டும். என்று தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
கிளை ஆண்டு விழா அநேகமாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில்  நடத்தி மகிழ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கிளை செயலர் குறிப்பிட்டார்.
தோழர் பார்த்திபன் கிளையின் உதவி செயலர் நன்றி நவில கூட்டம் இனிதே முடிவுற்றது .





No comments:

Post a Comment

    Click here to see Life Certificates validity of Chennai Telephone Circle Pensioners and Family Pensioners only.  Click the Link and view...