Friday 26 July 2019

AIBSNLPWA குரோம்பேட்டை கிளையின் நான்காவது  மாநாடு ஆனந்தா கல்யாண மாளிகையில் கோலாகலமான முறையில் நடைபெற்றது. கிளை தலைவர் M.கிருஷ்ணகுமார் தலைமை  தாங்கினார். தோழர் வள்ளிநாயகம் அனைவரையும் வரவேற்றார்  சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் S.தங்கராஜ் வரவேற்புரை வழங்கி வாழ்த்தி பேசினார். அவர் தமது உரையில் 03-09-2011 அன்று சைதாப்பேட்டை கிளையில் இருந்து 35 உறுப்பினர்களுடன் குரோம்பேட்டை கிளை
 ஆரம்பிக்கப்பட்டது  இன்று அனைவரின் கடுமையான உழைப்பின் பயனாக 560 ஆயுட்கால உறுப்பினர்களுடன் குரோம்பேட்டை கிளை சென்னை மாநிலத்தின் மூன்றாவது பெரிய கிளையாக மிளிர்கிறது.தற்சமயம் சென்னை மாநில உறுப்பினர் எண்ணிக்கை 4000. விரைவில் முக்கிய இலக்கான 5000 ஐ நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறோம்  இக்கிளையிலிருந்து சுமார் 30 பேர்களுடன் காஞ்சி கிளையும் , 78 பேர்களுடன் செங்கல்பட்டு கிளையும் ஏற்படுத்தப்பட்டது.என்று பேசி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் .
கிளை செயலர் தோழர் R மாரிமுத்து செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார் . ஒருமனதாக சபை அதனை ஏற்றுக்கொண்டது.. நிதிச் செயலர் தோழர் A.அடைக்கலராஜ் சமர்ப்பிக்க அவை அதை ஏற்றுக்கொண்டது.
மாநில தலைவர் தோழர் S.முனுசாமி , மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் , திருமதி லீலாவதி (DGM), திரு சித்தரஞ்சன் பிரதான் ( CCA  சென்னை )கிளையின் கௌரவ தலைவர் திரு G .செல்வம் , தோழர் சுந்தர் ( AIFPA பொருளாளர் ) மண்டப அதிபர் ஆகியோர்  வாழ்த்தி , கிளையின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள்  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 
கிளை தலைவர்         : தோழர் S .கண்ணன் ,
கிளை செயலர்           : தோழர் R .மாரிமுத்து 
கிளை பொருளாளர் : தோழர் M .செல்வராஜ் .
இடைவேளை மதிய உணவுக்குப்பின் மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் ராமன்குட்டி, கங்காதரராவ் ,  கோபாலகிருஷ்ணன், விட்டோபன் , வரப்பிரசாத் , ரத்னா ,ராமராவ் , வெங்கடாசலம் , சுந்தர் ஆகியோர் பேசினார்கள் .
சுமார் 400 க்கு மேல் கலந்து கொண்ட இம்மாநாட்டில் வேளாவேளைக்கு டீ , காபி , சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன .ஒரு கிளை மாநாட்டினை மாநில மாநாட்டிற்கு ஒப்பாக நடத்திய கிளை நிர்வாகிகள் அதிலும் தோழர் கிருஷ்ணமூர்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் சுறுசுறுப்பாக காரியமாற்றியது மிகவும்  பாராட்டுதலுக்குரியது. அருமையான கல்யாண மண்டபம் , இதமான குளிர் பதனம் (A C ), சுவையான உணவு , அன்பான உபசரிப்பு ,நினைவுப் பரிசு , நிகழ்ச்சிகளை நடத்திய பாங்கு , தடையில்லா மின்சாரம் , தொல்லை தராத ஒலிபெருக்கி - மொத்தத்தில் அத்தனையும் முதல் தரமாக அமைந்திருந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய மாநாடு , தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது..
         தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் 




No comments:

Post a Comment

  A list of pensioners names whose Life Certificate Validity expires on 30-04-2024 is posted below. A LINK is given by clicking the link the...