Wednesday, 1 May 2019

மே தினம் இன்று (01-05-2019) AIBSNLPWA சென்னை மாநில சங்கத்தால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நம் கொடி விண்ணதிரும் கோஷங்களுடன் மத்திய சங்க உதவி பொதுசசெயலர் தோழர் V. ரத்னாஅவர்களால் ஏற்றப்பட்டது. தன் பரப்புரையில் தற்போது நிலவும் தொழிலாளர் விரோதப்போக்கு நிலை குறித்து வருத்தங்கொண்டு பேசினார் . ஒற்றுமை நம்மிடையே தேவை என்று வலியுறுத்தினார். 
மத்திய சங்க பொருளாளர் தோழர் விட்டோபன் பொதுத்துறைகளை நசுக்க நினைக்கும் அரசின் போக்கினை தோலுரித்துக் காட்டி பேசினார். தமிழ் மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் நீண்டதொரு உரையாற்றினார். நம்முடைய ஓய்வூதியத்தில் அரசு கை வைக்க நினைத்தால் அதை வன்மையாக கண்டித்து போராட வேண்டும். இப்போது சங்கம் அமைக்கக்கூட தடை போடுகிறார்கள் இது மோசமான சுழ்நிலையை உருவாக்கும் என்றார்
சென்னை மாநில செயலர் தோழர் தங்கராஜ் இனி வரும் ஆண்டுகளில் இன்னும் நிறைய தோழர்களைக்கொண்டு மே தினம் கொண்டாடுவோம் என்றார். நலிவுற்று இருக்கும் அண்ணாரோடு கிளை சீரமைக்க 17 -05 -2019 அன்று கூடி முடிவெடுக்க வேண்டும் என்றார்.
மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் நன்றி நவில விழா கூட்டம் இனிதே முடிவுற்றது.
முக்கிய தலைவர்கள் பேசிய காணொளிக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்தால் வீடியோ படக்காட்சியினை காணலாம்.. 
விழா மேடையில் நம் சங்கத்தில் இணைந்த தோழர் ராஜேந்திரன் DGM 
 ( ஒய்வு ) அவர்கள் கௌரவிக்கப்பட்டார் 
CLICK THE ABOVE LINK TO SEE AND HEAR COM. VITTOBAN'S SPEECH.

CLICK THE ABOVE LINK TO SEE AND HEAR COM.R.VENKATACHALAM SPEECH.

CLICK THE ABOVE LINK TO SEE AND HEAR COM. S.THANGARAJ SPEECH.

CLICK THE ABOVE LINK TO SEE AND HEAR COM. M. KANNAPPAN SPEECH.









No comments:

Post a Comment

  Pensioners' Day was celebrated in a very grand manner in Venu Mahal Kalyana Mandapam by Chennai telephone Circle. Com. M. Aranganathan...