Thursday, 18 April 2019

அனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 13-04-19 அன்று தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலர் B.தியாகராஜன் கிளை மாநாடு முடிந்து ஓராண்டு நிறைவடைந்து ள்ளதாகவும் உறுப்பினர் எண்ணிக்கை 85 லிருந்து 161 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தோழியர் புனிதவதியின் பென்சன் பிறச்சினையை தீர்த்து வைத்த மாநில செயலருக்கும் துனை மா. செய்லர் கிருஸ்ணமூர்த்திக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார். மா.து.தலைவர் தோழர் M.கோவிந்தராஜன் அவர்கள் BSNLன் தற்பொழுதய நிலைமை 58 வயதில் ஓய்வு VRS மற்றும் இந்த இலாகா தனியாரிடம் விற்பதற்கான முயற்சி அதனையொட்டி இன்றய அரசியல் அதில் நமது பங்கு குறித்து விரிவாக உரையாற்றினார். கூட்டத்தில் 30கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாநில செய்லர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் பென்சன் சம்பந்தமாகவும் மெடிக்கல்/CGHS மற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்ற CWC குறித்து பேசினார்.நிலுவையில் இருக்கும் N.தாமோதரனின் பென்சன் குறைபாடு விரைவில் தீர்க்கப்படும் என்றார். கி.. பொருளாளர் தோழர் K.பாண்டி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
B.தியாகராஜன்.
கி.செயலர் அம்பத்தூர்.

No comments:

Post a Comment

  ஜனவரி....29 சென்னையில் சங்கமிப்போம்... 💪💪💪💪💪💪💪 ஆண்டுகள் பல... ஆகிவிட்டன... மறைந்தவர் சிலர்... மறந்தவர் பலர்... கூட்டுறவு... கூடாத உ...