Sunday, 28 April 2019


அன்புத் தோழர்களே ,
அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள் . உழைக்கும் வர்க்கத்தை போற்றிப்பாராட்டும் நன்னாளாம் மே தினம் என்பதனை நாம் நன்கறிவோம். உழைக்கும் மக்களே இவ்வுலகினைக் காப்பவர் என்று மகா கவி பாரதியார்                 " மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே " என்று போற்றுகிறார்..
மே தினத்தை சென்னைத் தொலைபேசி மாநிலம் சிறப்பாக கொண்டாடும் விதமாக சென்னை அண்ணா நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில்               01 -05 -2019 புதன்கிழமை காலை 0930 மணியளவில் ஒரு சிறப்புக்கூட்டம்  ஏற்பாடு செய்துள்ளது.  அதுபோழ்து அகில இந்திய , மாநில , கிளைகளை சார்ந்த சங்க முன்னணி அங்கத்தினர்கள் உரையாற்றுவார்கள்.
சென்னை மாநில சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மே தின விழாவை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.
அனைத்து கிளை தலைவர்களும், செயலர்களும் மற்றும் முன்னணி உறுப்பினர்களும் பெரு முயற்சி எடுத்து பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
மாநில சங்க நிர்வாகிகள்









No comments:

Post a Comment

  CEC meeting was held in Jeevana Jyoti Hall , Pantheon Road Egmore on 25-10-2025. In spite of incessant rain in chennai and suburbs, many o...