Saturday, 16 February 2019

இன்று ( 16-02-2019 ) மாலை 4-00 மணி அளவில் குரோம்பேட்டை கிளைக்கூட்டம் தலைவர் தோழர் கிருஷ்ணகுமார் தலைமையில் கூடியது. கிளைத்தலைவர் தோழர் மாரிமுத்து நிகழ்ச்சிகளை செம்மையாக நடத்தினார்.சமீபத்தில் பயங்கர வாதிகளின் சதிச்செயலுக்கு இன்னுயிர் ஈந்த இராணுவவீரர்களுக்கும், இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கும் ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. முக்கிய விருந்தினர்களாக தோழர் முனுசாமி செ .மா.தலைவர்  , மற்றும் தோழர் தங்கராஜ் செ .மா.செயலர் , பொறுப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி செ .மா உ.தலைவர் மற்றும் சில முன்னணி தோழர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த மாதம் சுமார் 6 பேர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். கைத்தறி துண்டுகள் அணிவிக்கப்பட்டு அவர்கள் வரவேற்கப்பட்டனர். குரோம்பேட்டை கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை 532 ஐ எட்டி விட்டதாகவும் இது இன்னும் பெருகி 600 ஐ விரைவில் எட்டி விடுவோம் என்று கிளை செயலர் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார். சுமார் 20 மகளிர் உட்பட 130 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கூட்டம் முடிவடைந்த பிறகும் பல தோழர்கள் இல்லம் செல்லாமல் கூட்ட வளாகத்திலேயே மற்ற தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. ஒரு    சிறு ஆலோசனை , குரோம்பேட்டை யில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்தினை ஏன் மாதாந்திர கூட்டமாக நடத்தக்கூடாது? மக்கள் நன்கு பயனுறுவரே.




No comments:

Post a Comment

  Life Certificates Valid Up To 31-01-2026 is released by CCA TN Circle. It contains 49 pages in Pdf format . A link is given. Just click an...