Saturday, 19 January 2019

இன்று 19-01-2019 மாலை 5-00 மணிக்கு கோடம்பாக்கம் கிளைக்கூட்டம்,  கோடம்பாக்கம் தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கிளைத்தலைவர் தோழர் வி ஆர் கிருஷ்ணன் தலைமை ஏற்க செயலர் தோழர் சாம்பசிவம் நிகழ்சிகளை நடத்தினார் . கஜா புயல் மற்றும் இயற்கை மரணம் எய்தியவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  சென்னைத் தொலைபேசி மாநில தலைவர் தோழர் முனுசாமி, செயலர் தோழர் தங்கராஜ் , பொருளாளர் தோழர் கண்ணப்பன் , அ .இ பொருளாளர் தோழர் விட்டோபன் , அ .இ துணைத்தலைவர் தோழர் நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கஜா புயல் நிவாரண நிதி அளித்தவர்கள் பெயர்களை தோழர் பார்த்திபன், உதவி செயலர் வாசித்தார். கூட்டத்தின் சிறப்பம்மசமாக , கஜா புயல் நிவாரண நிதி அதிகமாக பெற்றுத் தந்தவர்களுக்கு பாராட்டும் , பொன்னாடை அணிவிப்பும் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே நடந்தேறியது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வற்புறுத்தி பேசினார்கள்.
கிளை உறுப்பினர் எண்ணிக்கை 565 ஐ எட்டிவிட்டது இந்த மாதம் ஐந்து பேர் நம் சங்கத்தில் இணைவார்கள் என எதிர் பார்ப்பதாக செயலர் பெருமையோடு அறிவித்தார்.
20 மகளிர் உட்பட 102 பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.அனைவருக்கும் சுவைமிகு ஸ்விட் ,காரம் காபி வழங்கப்பட்டது. துணைத்தலைவர் பிறவிப்பெருமாள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது.








No comments:

Post a Comment

    Click here to see Life Certificates validity of Chennai Telephone Circle Pensioners and Family Pensioners only.  Click the Link and view...