Thursday 4 October 2018

சென்னை தொலைபேசி மாநில  செயற்குழு கூட்டம் 02-10-2018 அன்று காலை 10-00 மணிக்கு சென்னை-8ல் உள்ள ஜீவன ஜோதி ஹாலில் சிறப்பாக கூடியது.
அஞ்சலி : சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் , முன்னாள் பாரத பிரதமர் அட்டல்  பிஹாரி வாஜ்பாய் , நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜீ, பூரியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டில் இதய கோளாறு காரணமாக மரணமடைந்த தோழர் மொய்த்ரா அவர்களுக்கு ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.
பூரி அனைத்திந்திய மாநாடு குறித்து மாநில தலைவர் தோழர் முனுசாமி, செயலர் தோழர் தங்கராஜ், முன்னாள் மாநில செயலர் தோழர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர்.
சென்னைத்தொலைபேசி மாநிலம் சார்ந்த அனைத்திந்திய பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர்கள் G .நடராஜன் (அனைத்திந்திய துணைத்தலைவர்), தோழர் T.S.விட்டோபன்அனைத்திந்தியபொருளாளர்), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழியர் V .ரத்னாஅனைத்திந்திய உதவி செயலர்) அவர்கள் பாராட்டப்பட்டு கைத்தறி துண்டுகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 
நம் சங்கத்தின் பெயர் AIBSNLPWA என்பது தற்சமயம் மாற்றவேண்டாம் என்கிற மாநாட்டு முடிவு தெரிவிக்கப்பட்டது. அக்டொபர் /நவம்பர் மாதத்தில் டில்லியில் நடக்க இருக்கும் கருத்தரங்கம் மற்றும் அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய மாநில /மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட உள்ள ஒரு நாள் உண்ணாவிரதம் குறித்தும் பேசப்பட்டது.
சென்னைத்தொலைபேசி மாநிலத்திற்கு சிறப்பாக செய்திகளை வெளியிட்டு அவ்வப்போது தகவல்களைத் தெரிவிக்க ஒரு வலைத்தளம் தேவை என்பதை உணரப்பட்டு ஒரு வலைத்தளம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக இந்த வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் இன்னும் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் முகவரி aibsnlpwachtd.blogspot.com    தோழர்கள் தினந்தோறும் இந்த வலைதள பகுதியை பார்த்து பயனுற கேட்டுக்கொள்ளப்பட்டது.
மதியம் அனைவருக்கும் சுவைமிகு உணவு பரிமாறப்பட்டது. அனைத்து கிளை செயலர்கள் தங்கள் கிளை செய்திகளை பரப்பினார்கள். மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் நம் மாநில ஆயுள் உறுப்பினர் எண்ணிக்கை 3602 என்று பலத்த கர கோஷங்களிடையே தெரிவித்தார். Each One Catch Two என்ற செயல்பாட்டின்படி ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டு தோழர்களை நம் சங்க உறுப்பினராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. செயற்குழு கூட்டம் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் முழுக்க முழுக்க உபயோகிக்கப்பட்டது மிகவும் போற்றுதற்குரிய விஷயமாகும்.








No comments:

Post a Comment

Circle Executive Committee Meeting of ChTD  was conducted on 23-04-2024 in Jivana Jyoti Hall, Egmore in a grand manner. In spite of Chitra P...