மாநில தலைவர் தோழர் M .முனுசாமி , மாநில செயலாளர் தோழர் S .தங்கராஜ் , மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் , மாநில துணைத்தலைவர் தோழர் M . கோவிந்தராஜன் , மாநில துணைத்தலைவர் தோழர் U .பழனி, மாநில உதவி செயலாளர் தோழர் R . குணசேகரன் ஆகியோர் பேசினார்கள் .
கவுரவ விருந்தினர் தோழர் D . கோபாலகிருஷ்ணன் மத்திய சங்கத்தின் தலைவர் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் .தோழர்கள் சிலரின் வினாக்களுக்கு சிறந்த முறையில் பதிலளித்தார் . அகவை 80 ஐ அடைந்தவர்கள் மேடையில் கௌரவ படுத்தப்பட்டார்கள் .
தோழர்கள் M . அரங்கநாதன் , C .ஒளி , R .இளவழகனார் ஆகியோர் மீண்டும் கிளை தலைவர் , செயலர் மற்றும் பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
நிகழ்ச்சிக்குப் பிறகு சுவைமிகு உணவு தலைவாழை இலைபோட்டு பரிமாறப்பட்டது .
மிக அருமையாக திட்டமிட்டு , கச்சிதமாக , நிகழ்ச்சிகளில் தொய்வில்லாமல் நடத்தப்பட்ட இந்த மாநாடு பலராலும் பாராட்டப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு , எல்லாரையும் அன்பால் அரவணைத்து செல்லும் கிளை செயலர் தோழர் C .ஒளி யின் செயல்பாடுகள் போற்றுதற்குரியது. வந்திருந்த தோழர்களுக்கு பல வகைகளில் உபசாரங்கள் புரிந்த அனைத்து தோழர்களின் சீரிய பணி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சிகளை தமக்கே உரிய வகையில் இளம் புன்னகையுடன் தொகுத்து வழங்கினார் தோழர் R .பாண்டியன். மாநாட்டில் சுமார் 350 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்
மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
CLICK HERE TO SEE a part of DG's Speech Video
No comments:
Post a Comment